தேவன் தமது விசேஷ குணங்களினால் அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறார் Beaumont, Texas, USA 64-0311 1பரலோகப் பிதாவே, மறுபடியுமாக எங்களை டெக்ஸாஸிலுள்ள போமாண்டிற்கு வழி நடத்தின சிலாக்கியத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். இந்த, முன் மண்டபத்தை சுற்றிலும் நான் பார்க்கும்போது, இங்கு நாங்கள் முன்பிருந்த சமயங்களும், அப்பொழுது நீர் செய்த மகத்தான கிரியைகளும் எங்கள் நினைவுக்கு வருகிறது. அப்பொழுது வந்திருந்த அநேகர் இன்றிரவும் வந்துள்ளனர் என்பதில் ஐயமில்லை. வியாதிப்பட்டிருந்த அவர்களுடைய சரீரங்களை அன்று நீர் தொட்டிராவிடில், இன்றிரவு அவர்கள் இங்கிருக்கமாட்டனர். நீர் அவர்களை சுகப்படுத்தினீர்; அவர்கள் இங்குள்ளனர். அநேக சம்பவங்கள் எங்கள் சிந்தைகளில் ஞாபகார்த்தமாயுள்ளன. அவையனைத்தும் எங்களுடன் நித்தியத்தில் பிரவேசிக்கும். பரிசுத்த ஆவியை இந்நேரத்தில் நீர் அபரிமிதமாய் ஊற்ற வேண்டுமாய் ஜெபிக்கிறோம். எங்கள் அனைவரையும் ஒருங்கே ஆசிர்வதியும். ஒவ்வொரு சபையையும் ஒவ்வொரு அங்கத்தினரையும் ஆசிர்வதியும். ஆண்டவரே, விசேஷமாக இந்த அருமை வாலிப சகோதரனை, சகோ. பெர்ரீ கிரீனை, ஆசிர்வதியும் இதை மற்றவர்க்கு எடுத்துக் கூற அவர் முன்னணியில் நிற்கிறார். 'அழகான பட்டினம்' என்னும் பெயர் கொண்ட இந்த ஸ்தலத்திலுள்ள ஜனங்கள் அவர் சிநேகிக்கும் கிறிஸ்துவினிடம் இந்த ஜனங்களைக் கொண்டு வர வேண்டுமெனும் உணர்வை இந்த வாலிபர் கொண்டிருக்கிறார். சரியானது என்று அவர் கருதும் ஒவ்வொரு ஊழியத்தையும் அவர் இங்கு கொண்டு வர முயன்று அதை வார்த்தையினால் பரிசோதித்து ஜனங்கள் இரட்சிக்கப்படுவதை காண வேண்டுமென்று அவர் விரும்புகிறார். பிதாவே, உமது ஊழியத்துக்கென்று எங்களை நாங்கள் தேவனுடைய கனத்துக்கும் மகிமைக்கும் ஒப்புக்கொடுக்கும் இந்நேரத்தில், எங்களுக்கு உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 2ஒவ்வொரு இரவு கூட்டத்திற்கும் யாரையாகிலும் உங்களுடன் கூட்டிக் கொண்டு வர மறவாதீர்கள். தொலைபேசியில் இந்தக் கூட்டங்களைக் குறித்து மற்றவர்க்கு அறிவியுங்கள். ஒவ்வொரு போதகருக்கும் ஒவ்வொரு சபைக்கும் இதை தெரியப்படுத்துங்கள். அது என்னவாயிருப்பினும், அவர்கள் வித்தியாசமான கருத்துக்களைக் கொண்டவர்களாயிருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் இங்கு வந்து அமர்ந்து நல்லவிதமாக நடந்து கொண்டால், நீங்கள் வந்துள்ளதை நாங்கள் பாராட்டுவோம். உங்கள் வேதாகமத்தை கொண்டு வாருங்கள். எழுத்து கோலினால் பிரசங்கத்தை எழுதிக் கொள்ளுங்கள். நீங்கள் வீடு திரும்பின பின்பு, அது சரியா இல்லையாவென்று தேவனுடைய வார்த்தையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். உங்கள் சொந்த வேத தத்துவத்தை ஏற்றுக் கொள்ள வேண்டாம். வேதத்தில் எவ்விதமாக எழுதப்பட்டுள்ளதோ, அதை அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள். அநேகமுறை நாம், 'இதற்கு இது அர்த்தம்', 'இதற்கு அது அர்த்தம்', என்று கூற வகையுண்டு. ஆனால் தேவனுக்கு எந்த வியாக்கியானியும் அவசியமில்லை. அவரே அவருடைய வார்த்தையை வியாக்கியானம் செய்கிறவராயிருக்கிறார். தேவன், “வெளிச்சம் உண்டாகக்கடவது'' என்றார். அப்பொழுது வெளிச்சம் உண்டானது. அதற்கு எவ்வித வியாக்கியானமும் அவசியமில்லை. அவர் கூறின விதமாகவே அது நிறைவேறினது. அவர், ”ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்'' என்றுரைத்தார். அதற்கு எவ்வித வியாக்கியானமும் தேவையில்லை. இக்காலத்திற்கென தேவன் சிலவற்றை வாக்களித்துள்ளார். அவை நிறைவேறியே ஆகவேண்டும். அவர் அதை கூறியிருப்பாரானால், அதற்கு வியாக்கியானம் தேவையில்லை. தேவன் அவ்விதமாக கூறி அவரே அதை வியாக்கியானப்படுத்துகிறார். அதனால் தான் தேவனுடைய வார்த்தையை தனிப்பட்ட விதத்தில் வியாக்கியானப்படுத்தக் கூடாது என்று வேதம் கூறுகிறது. தேவன் தமது வார்த்தையை உறுதிப்படுத்துவதன் மூலம் அதை வியாக்கியானப்படுத்துகிறார். 3அவருடைய வார்த்தையை நாம் எபிரேயர் நிருபம் முதலாம் அதிகாரத்திலிருந்து படிக்கும் போது, சற்று எழுந்து நிற்கலாமா? இந்த வார்த்தைக்கு கனத்தை அளிக்க வேண்டுமெனும் நோக்கத்திற்காகவே உங்களை எழுந்து நிற்கக் கூறுகிறேன், வார்த்தை தேவன் என்பதை நான் விசுவாசிக்கிறேன். “ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி... நமக்குள்ளே வாசம் பண்ணினார்.'' (யோவான்: 1:14). இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராயிருக்கிறார். (எபி: 13:8). அதுவே நமது கூட்டங்களின் முக்கிய பொருளாய் (theme) உள்ளது. எனவே அச்சடிக்கப்பட்ட அவரை நாம் வார்த்தையாக படிக்கும்போது, நாம் எழுந்து நிற்கிறோம். தேசிய கொடிக்கு நாம் உறுதிமொழி (allegiance) அளிக்கும்போது, அந்த கொடி நம்மை கடந்து வரும்போது, அதற்கு கனத்தை செலுத்தும் வண்ணம் நாம் எழுந்து நிற்கிறோமல்லவா? அப்படியிருக்க, தேவனுடைய வார்த்தையை நாம் படிக்கும் போது, அதைக் காட்டிலும் எவ்வளவு அதிகமான மரியாதையை நாம் செலுத்த வேண்டியவர்களாயிருக்கிறோம்? எபிரேயர்: 1:1-3-ஐ நாம் வாசிக்கும் போது எழுந்து நிற்போம். “பூர்வகாலங்களில் பங்கு பங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம் பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக் கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார். இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலே தாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டும் பண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்தார்'' 4ஜெபம் செய்வோம். எத்தனை பேர் வணங்கிய தலைகளுடனும், இருதயங்களுடனும் இக்கூட்டத்தின் மூலமாய் தேவன் உங்கள் விண்ணப்பங்களுக்கு உத்தரவு அருள வேண்டுமென்று ஜெபத்தில் நினைவு கூறப்பட வேண்டுமென்று விரும்புகிறீர்கள்? உங்கள் கரங்களை சற்று உயர்த்துங்கள். கர்த்தர் உங்கள் கரங்களைக் காண்கிறார். எங்கள் பரலோகப் பிதாவே, மனிதக் கண்கள் காணும் தூரம் வரைக்கும் கணக்கற்ற கரங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. உண்மையாகவே சகோதரன் க்ரீனின் வெளிப்பாடும், நான் இங்கு வர வேண்டுமெனும் வாஞ்சையும் சரியென இதன் மூலம். நிரூபணமாயுள்ளது. பிதாவே, உமது வார்த்தையின் படியும், உமது வாக்குத்தத்தத்தின்படியும், அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றுவீராக! ஆண்டவரே, வார்த்தை எங்கள் வாழ்க்கையில் சரியான விதத்தில் பொருத்தப்பட்டு, வார்த்தை எங்கள் மத்தியில் மாம்சமாக்கப்பட்டு, ஜனங்கள் பரலோகத்திலுள்ள தங்கள் கணக்குகளிலிருந்து பெற்றுக் கொள்ளத் தக்கதாக அவர்களுக்கு போதிய விசுவாசத்தை அருளுவீராக, நீண்ட காலம் முன்பே இயேசு இவர்கள் பாவங்களுக்காகவும், வியாதிகளுக்காகவும் கணக்கை செலுத்தி தீர்த்துவிட்டார். இப்பொழுது அவர்கள் பிரயாணப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். உமது வார்த்தையை எங்களுக்கு நீர் வெளிப்படுத்தித் தருவதற்காக, நாங்கள் காத்திருக்கும் இந்நேரத்தில் எங்களை ஆசிர்வதித்து, வார்த்தையை எங்கள் மத்தியில் மாமிசமாக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். (உட்காருங்கள்). 5அடுத்த நாற்பத்தைந்து ஐம்பது நிமிடங்களுக்கு, நீங்கள் எழுந்து நடமாட வேண்டாமென்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். சத்தியம் என்னவென்பதை இப்பொழுது நாம் அறிந்து கொள்ள விரும்புகிறோம். நான் அறிந்தவரையில் ஒரே ஒரு சத்தியம் தான் உண்டு. அது தான் வேதாகமம். என்றாவது ஒரு நாள் தேவன் உலகத்தை நியாயந்தீர்க்கப் போகிறாரென்று நாமறிவோம். மானிடராகிய நாம் ஒவ்வொருவருமே நியாயத்தீர்ப்புக்காக அவருடைய சமுகத்தில் கொண்டு வரப்படப் போகிறோம். இன்னும் சில நிமிடங்களில் நான் அளிக்கவிருக்கும் செய்திக்காக சில குறிப்புகளையும் வேதவாக்கியங்களையும் இங்கு எழுதி வைத்திருக்கிறேன். 6இங்கு “கத்தோலிக்கர் யாராகிலும் உள்ளனரா?'' என்று இன்றிரவு நான் கேட்க நேர்ந்தால், “ஆம்'' என்று அவர்கள் பதிலளிக்கக் கூடும்... “நல்லது எதைக்கொண்டு தேவன் உலகத்தை நியாயந்தீர்க்கப் போகிறார்?'' என்று கேட்டால், “கத்தோலிக்க சபையைக் கொண்டு'', என்று அவர்கள் உத்தரவு அளிக்கக் கூடும். நான் மேலும், ”எந்த கத்தோலிக்க சபை?'' என்று கேட்டேன் என்று வைத்துக் கொள்வோம். அவர்களிடையே நிறைய கருத்து வேறுபாடு உண்டு. ஒன்று ரோமன், மற்றொன்று கிரேக்கு, மற்றொன்று வைதீகம் (orthodox) போன்றவை. அத்தகைய ஸ்தாபனங்கள் நிறைய நம்மிடையேயுள்ளன. மெதோடிஸ்டுகள் எழுந்து நின்று, “மெதோடிஸ்டு சபையைக் கொண்டு தான் அவர் நியாயந்தீர்ப்பார்'' என்று கூறலாம். அப்படியானால் பாப்டிஸ்டுகளுக்கு விமோசனமில்லை. பாப்டிஸ்டு சபையைக் கொண்டு அவர் நியாயந்தீர்ப்பாரானால், மெதோடிஸ்டுகளுக்கு எவ்வித விமோசனமுமில்லை. ஒரு சிறு வார்த்தையைத் தவறாகக் கூறினதால் (எல்லாவற்றையும் அல்ல, ஒரு வாக்கியத்தின் ஒரு சிறு பாகத்தை), தேவனுடைய வார்த்தையை சிறிது சந்தேகித்ததன் விளைவாக எல்லா மரணமும், எல்லா வியாதிகளும், எல்லா துயரங்களும் உண்டாயின. ஏதேன் தோட்டத்தில் ஏவாள் அவ்வாறு செய்தாள். ஒரு ஸ்திரி தேவனுடைய வார்த்தையை தவறாகப் புரிந்து கொண்டதனால் இவையனைத்தும் தோன்றின. அவள் வேண்டுமென்று அப்படி செய்யவில்லை, “அவள் வஞ்சிக்கப்பட்டாள்'' என்று வேதம் கூறுகிறது. அவள் ”வஞ்சிக்கப்பட்டு“ வார்த்தையை அவிசுவாசித்ததனால் இவையனைத்தும் விளைந்திருக்குமாயின் நீங்களும் நானும் தேவனுடைய வார்த்தை அனைத்தையும் விசுவாசிப்பதை தவிர, வேறெதையும் அதற்கு குறைவாகச் செய்யக் கூடாது. தேவன் பெந்தேகோஸ்தே சபையைக் கொண்டோ, அல்லது மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, கத்தோலிக்க சபையைக் கொண்டோ உலகத்தை நியாயந்தீர்ப்பார் என்பதை என்னால் நம்ப முடியாது. அவர் அப்படி செய்யமாட்டார். அவர் இயேசு கிறிஸ்துவைக் கொண்டே அதை நியாயந்தீர்ப்பார். அவர் அவ்விதம் கூறியுள்ளார். கிறிஸ்து வார்த்தை. ''ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்து அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி... நமக்குள்ளே வாசம் பண்ணினார். அவர் நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராயிருக்கிறார்''. 7எல்லாமே அந்த மகத்தான நித்தியமானவர். நித்தியம் என்பது தொடங்கவும் இல்லை, அது முடியப் போவதுமில்லை. எனவே அந்த மகத்தான நித்தியமானவருக்குள்ளே பிதா, குமாரன், இரட்சகர், சுகமாக்குபவர் போன்ற தன்மைகள் குடிகொண்டிருந்தன. இப்பொழுது நடைபெறுவது என்னவெனில், அவர் தமது தன்மைகளை வெளிப்படுத்திக் கொண்டே வருகிறார். அவ்வளவு தான். நமது பெயர்கள் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் உலக தோற்றத்துக்கு முன்னமே எழுதப்பட்டுவிட்டன. எனவே வார்த்தை அதன் மேல்படும் போது, அங்கு நித்திய ஜீவனுக்கென்று நியமிக்கப்பட்ட வெளிச்சம் இருக்குமாயின், இயேசு சொன்னார்: என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால், அவன் என்னிடத்தில் வரமாட்டான். பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும் (யோவான்: 6:44, 37). என்வே அது எப்பொழுதுமே நிரந்தரமாக வார்த்தை, வார்த்தை என்ற விதமாய் அமைந்துள்ளது. 8இன்றிரவு, நாம் படித்த வேத பாகத்திலிருந்து “தேவன் தமது விசேஷ குணங்களினால் அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறார்” என்னும் பொருளின் பேரில் பேச எத்தனித்துள்ளேன். நாம் காணும் எல்லாவற்றையுமே அதனதன் குணங்களினால் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது. ஜீவராசிகளில் நாம் பறவை இனத்தை எடுத்துக் கொள்வோம். பிறக்கும்போது, 'எல்லோ ஹாமர்' (Yellow Hammer), 'ஜே பறவை' (Jay Bird) இவ்விரண்டும் காண்பதற்கு ஒரே போன்று இருக்கும். ஆனால் 'எல்லோ ஹாமர்' சிறகையடித்துக் கொண்டே கீழே இறங்கி, மேலே சென்று இவ்விதம் மேலும் கீழும் பறந்து செல்லும். ஆனால் 'சிஜே பறவை' அவ்விதம் பறக்காது. அது நேர்க்கோட்டில் பறந்து செல்லும். அதுபோன்று, காடைகளில் காணப்படும் வித்தியாசமான இனங்கள் வித்தியாசமாக பறக்கின்றன. அதை வேட்டைக்காரர் நன்கு அறிவர். அவைகளின் வெவ்வேறு பறக்கும் குணங்கள் அவை என்ன பறவை என்பதை அடையாளம் காண்பிக்கின்றன. மலையோரத்திலுள்ள ஒரு செம்மறியாடு முதுகைத் திருப்பி நின்று கொண்டிருக்குமானால், அதன் பின்புறத்தின் ஒரு பாகம் வெள்ளையாகவும் மற்ற பாகம் சாம்பல் நிறமாகவும் இருக்கும். இது உங்களுக்குத் தெரியாமல் போனால், அது மான் என்று தவறாக எண்ணிவிடுவீர்கள். பாருங்கள்? ஆகவே அது என்னவென்று அறிந்துகொள்ள அதன் தோற்றங்களை நன்கு அறிந்திருக்க வேண்டும். இப்படியாக மிருக இனத்தைக் குறித்து சொல்லிக் கொண்டே போகலாம். 9இப்பொழுது நாம் மானிட இனத்திற்கு வருவோம். ஆணுக்கும் பெண்ணுக்கும் தோற்றத்தில் அநேக வித்தியாசங்கள் உள்ளன. அவர்கள் இருவரும் மானிட வர்க்கத்தைச் சேர்ந்தவரே. ஆயினும் ஆண் வர்க்கம், பெண் வர்க்கம் இவ்விரண்டின் தன்மைகளிலுள்ள வேறுபாடுகள் அவர்களை அடையாளம் கண்டு கொள்ளச் செய்கின்றன. சில நாட்களுக்கு முன்பு, ராஜஸ்திரி சாலொமோனுக்குக் கொடுத்த பரிசோதனைகளை படித்துக் கொண்டிருந்தேன். அவைகளில் ஒன்று, அவள் பெண்களை ஆண்களைப் போல் உடுத்தி சாலொமோனிடம் கொண்டு வந்தாள். அவன் அவர்களை நடக்கச் செய்து, வேறு சில செயல்களையும் புரியச் செய்து, உடனே அவர்கள் 'பெண்கள்' என்று கண்டுபிடித்துக் கூறிவிட்டான். பெண்களின் விசேஷ குணங்களின் மூலமாக அவர்களை அவன் கண்டுபிடிக்க முடிந்தது. சில காரியங்களை பெண்கள் மறைக்கவே முடியாது. அவர்களுடைய விசேஷ குணங்கள் அவர்கள் பெண்கள் என்பதைக் காட்டிக் கொடுத்துவிடும். அது போன்று தான் வலது கை, இடது கை பழக்கமுள்ளவர்களும் கூட அவர்கள் இருவரும் மானிடரே. ஆனால் நீங்கள் கவனித்தால், ஒருவர் வலது கை பழக்கமுடையவர், மற்றவர் இடது கை பழக்கமுடையவர். அவரவருடைய விசேஷ குணங்கள் அவர்கள் எந்த கை பழக்கமுடையவர் என்பதைக் காண்பித்துக் கொடுத்துவிடுகின்றன. பாருங்கள்? அவர்களிருவருக்கும் கைகள் உள்ளன. காண்பதற்கு இவ்விரு கைகளும் ஒரே மாதிரியுள்ளன. 10இங்கு ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். மத்தேயு: 24-ல் இயேசு, கடைசி நாட்களில் இவ்விரு ஆவிகளும் ஒன்றுக்கொன்று மிக அருகாமையில் இருந்து கொண்டு, “கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும்” என்று கூறியுள்ளார். அது வலதுகையும் இடதுகையும் போன்றது. இரண்டிற்கும் கட்டை விரல்கள், விரல்கள், நகங்கள், சிறு விரல்கள், நடு விரல்கள், ஆள் காட்டி விரல்கள் உள்ளன. ஒன்று மற்றதைக் காட்டிலும் வித்தியாசமானது. இரண்டிற்கும் ரேகைகள் உள்ளன; ஒன்று ஒரு பக்கமும் மற்றது மற்ற பக்கத்திலும் திரும்பியுள்ளது. இரண்டும் காண்பதற்கு ஒரே போன்றிருந்தாலும் அவைகளுடைய குணங்களில் வித்தியாசம் காணப்படுகிறது. ஒன்று இடது கை, மற்றது வலது கை. அது தான் உள்ள ஒரே வித்தியாசம். அதுபோன்று, ஆவிகளும் கடைசி நாட்களிலும் இருக்கும். அவைகளின் குணங்கள் அது தேவனுடையதா அல்லவா என்பதை காட்டி கொடுத்துவிடும். ஒன்று சரி, மற்றது தவறு. அதை தேவனுடைய விசேஷ குணங்கள் மூலமாகவே அறிந்து கொள்ள முடியும். அது அப்படித்தான் இருக்கவேண்டும் வலது கை என்றால் சரி, இடது கை என்றால் தவறு என்பது. போல. அவ்வாறு அதன் விசேஷ குணங்களின் மூலமாக அது என்ன ஆவியென்று தீர்மானிக்கப்படுகிறது. 11இஸ்ரவேல் ஜனங்கள் பயணம் செய்து எகிப்தை விட்டு வெளிவந்தனர். தேவன் இஸ்ரவேலருடன் கூட இருந்தார். அவர்களுக்கு அவர் எகிப்தில் மகத்தான அடையாளங்களைக் காண்பித்தார். அவர்களிடம் அவர் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பி அவருடைய எழுதப்பட்ட வார்த்தையை நிறைவேற்றினார். அவர்கள் வெளியேறியபோது, அவருடைய விசேஷ குணங்களை நாம் தொடக்கத்திலிருந்து கவனித்துக் கொண்டே வருகிறோம். அவர் எப்படி மோசேயை சந்தித்தார் என்றும், என்னவெல்லாம் செய்தார் என்றும். அவர்கள் பயணம் செய்து மோவாப் தேசத்தை அடைந்தனர். மோவாப் ஒரு பெரிய தேசம். அவர்கள் அஞ்ஞானிகளல்ல. அல்லவே அல்ல. அவர்கள் லோத்தின் குமாரத்திகளின் புத்திரர். அவர்கள் விசுவாசிகள். இந்த இரண்டு தேசங்களையும் கவனியுங்கள். ஒன்று ஸ்தாபிக்கப்பட்டும் நிலையாயுள்ள தேசம். மற்றது பயணம் செய்து கொண்டிருக்கும் தேசம். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அடைவதற்காக அவர்கள் பயணம் செய்து கொண்டிருக்கையில், வழியில் மோவாப் தேசம் இருந்தது. இவ்விரண்டு தேசங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு தீர்க்கதரிசி இருந்தான். ஒருவன் மகத்தான போதகனும் தீர்க்கதரிசியுமான பிலேயாம், மற்றவன் மோசே, இஸ்ரவேலரைச் சபிப்பதற்காக பிலேயாம் வருகிறான். 12கவனியுங்கள், அடிப்படையில் இருவருமே சரியாயிருந்தனர். தீர்க்கதரிசியாகிய பிலேயாம், அந்த அடிப்படை தத்துவக்காரன் “ஏழு பலிபீடங்களைக் கட்டுங்கள்'' என்றான். ஏழு என்பது தேவனுடைய எண். ”ஒவ்வொரு பலிபீடத்தின் மேலும் ஒரு பழுதற்ற காளையை செலுத்துங்கள்'' என்றான். இஸ்ரவேலருடைய பாளயத்திலும் அதே பலி செலுத்தப்பட்டு வந்தது. அவன் ''ஒவ்வொரு பலிபீடத்தின் மேலும் ஒரு ஆட்டுக்கடாவை செலுத்துங்கள்'' என்றான். அது கிறிஸ்துவின் வருகை குறிக்கிறது. இஸ்ரவேலரும் அது போன்ற பலியையே செலுத்தி வந்தனர். ஒரே விதமான பலி பீடங்கள், அதே தேவன். ஆனால் ஒருவன் தவறு, மற்றவன் சரி. வார்த்தையின் அடிப்படையில் இருவருமே சரி. ஆனால் ஒருவனுடைய குறிக்கோள்கள் தவறாயிருந்தன. தேவன் அளித்திருந்த வாக்குத்தத்தத்திலிருந்து அவனுடைய சகோதரனை விலக்க அவன் முயன்றான். 13வேறொரு விஷயம். பிலேயாம் தீர்க்கதரிசி அடிப்படையானவனாயிருந்தான். (Fundamentalist). ஆனால் தீர்க்கதரிசியாகிய மோசேயோ தேவனுடைய விசேஷ குணங்களினால் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டான். அங்கு இயற்கைக்கு மேம்பட்ட ஒளி, அக்கினி ஸ்தம்பம், அவர்கள் மேல் தொங்கிக் கொண்டிருந்தது. அவர்களுடைய பாளயத்தில் அநேகர் தெய்வீக சுகம் பெற்றனர். இயற்கைக்கு மேம்பட்ட தேவன் இயற்கைக்கு மேம்பட்ட அடையாளங்களை அங்கு காண்பித்தார். இரண்டு தேசங்களும் தொடங்கினபோது, தேவன் அவர்களைக் குறித்து ஆபிரகாமுக்கு அளித்திருந்த வாக்குத்தத்தத்தின் மேல் அவர்கள் நின்று கொண்டிருந்தனர். மோசேக்கு தேவன் ஆபிரகாமிடம் அளித்திருந்த வாக்குத்தத்தம் உண்டாயிருந்தது. பிலேயாமும் தேவனுடைய தீர்க்கதரிசியாக அங்கு நின்று கொண்டிருந்தான். அவர்களை அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய ஒரே வழி, அடிப்படை போதகத்தின் மூலமாயல்ல, ஆனால் தேவனுடைய விசேஷ குணங்களின் மூலமாக. அங்கு இஸ்ரவேலரிடம் ராஜாவின் சத்தம் இருந்தது, அவர்களிடையே பாவ நிவாரணமும், வெண்கல சர்ப்பமும், அடிக்கப்பட்ட கன்மலையும் இருந்தன. தேவன் அவர்களோடே கூட இருந்து தம்மை இயற்கைக்கு மேம்பட்ட ஒளியில் ஒன்றுபடுத்திக் கொண்டு, அவர்களுடைய பயணத்தின்போது அவர்களுடைய வியாதிகளை சுகமாக்கினார். அவர் யாரென்பதை அவருடைய விசேஷ குணங்கள் நிரூபித்தன. அவர்கள், தாங்கள் வாழ்ந்து வந்த காலத்துக்குரிய வார்த்தையுடன் ஒன்றுபட்டிருந்தனர். தேவனுடைய விசேஷ குணங்கள் தேவனை மோசேயுடன் ஒன்றுபடுத்தின. அது என்னவென்று பாருங்கள், அக்கினி ஸ்தம்பம் கிரியை செய்து கொண்டிருந்த பாவ நிவாரணம் இயற்கைக்கு மேம்பட்ட அடிக்கப்பட்ட கன்மலை... மேலும் சுகமாக்குதலைக் குறிக்கும் வெண்கல சர்ப்பம். அவர்கள் தங்களுடைய பணியில் ஈடுபட்டு, தேவனுடைய வாக்குத்தத்தத்தின் பேரில் நின்று கொண்டிருந்தனர். 14தேவனுடைய விசேஷ குணங்கள் இயற்கையானவையல்ல. தேவனுடைய விசேஷ குணங்கள் இயற்கைக்கு மேம்பட்டவை. ஏனெனில் அவர் சிருஷ்டி கர்த்தர். தேவனுடைய விசேஷ குணங்கள் வெளிப்படத் தொடங்கும்போது, அது நவீன கருத்துக்களுக்கு முரணாக அமைந்துள்ளதால், அவர்களை அது அணியிலிருந்து புறம்பாக்கிவிடுகிறது. அவர்களால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் அவர் தமது வாக்குத்தத்தத்தை விட்டு விலகுவதில்லை. தேவன் ஒவ்வொரு காலத்திலும் தமது வார்த்தையை அருளிவந்தார். ஒரு உதாரணத்தை இப்பொழுது நாம் பார்ப்போம். மரியாளின் கணவனான யோசேப்பை எடுத்துக் கொள்வோம். அவள் அவனுக்கு நியமிக்கப்பட்டிருந்தாள். அவர்களுக்கு விவாகமாக வேண்டியிருந்தது. ஆனால் அவர்கள் கூடி வரும் முன்பே, அவள் பரிசுத்த ஆவியினால் கர்ப்பவதியானாள். கிறிஸ்தவர்களாகிய நாம் அது உண்மையென்று நம்புகிறோம். நாம் கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டுமானால், அதை நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் அது வேதாகமத்தில் உரைக்கப்பட்டுள்ளது. நீங்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதற்கு, வேதாகமத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்க வேண்டும். இங்கு பரிசுத்த ஆவியானவர் இருப்பாரானால், ஒவ்வொரு வார்த்தையையும் அவர் “ஆமென்'' என்று ஆமோதிப்பார். யோசேப்பு ஒரு சாதாரண மனிதன், நல்ல மனிதன். காபிரியேல் அவளை சந்தித்து, பரிசுத்த ஆவியானவர் அவளை நிழலிடுவார் என்றும், அவள் கர்ப்பவதியாகி பிள்ளை பெறுவாள் என்றும், அதற்கு இயேசு என்று பெயரிட வேண்டுமென்றும் அவன் கூறினதை அவள் யோசேப்பிடம் கூறியிருப்பாள் என்பதில் சந்தேகமில்லை. யோசேப்பு அவளுடைய பழுப்பு நிற கண்களை உற்று நோக்கி, அவளுடைய களங்கமின்மையைக் கண்டு அவள் கூறினதை மனப்பூர்வமாய் விசுவாசிக்க வேண்டுமென்று தான் விரும்பியிருப்பான். ஆயினும் அது வழக்கத்திற்கு மாறான ஒன்றாக இருந்தபடியால், அவளை இரகசியமாய் தள்ளிவிட யோசனையாயிருந்தான். 15ஒரு மனிதன் தன் செயலில் உத்தமனாய் காணப்படுவானானால், அது உண்மையென்று அவனுக்குக் காண்பிக்க, தேவன் ஒரு வழி வகுத்துக் கொடுப்பார். நீ உத்தமனாயிருந்தால், தேவன் கடமைப்பட்டவராயிருக்கிறார். ஆனால் அதை கண்டு நீ விலகி செல்வாயானால் நியாயந்தீர்க்கப்படுவாய். ஆனால் நீ உத்தமனாயிருந்து அது சத்தியமா என்று அறிந்து கொள்ள விரும்பினால்... யோசேப்பு, அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். அவள், “இது அசாதாரணமான ஒன்று'' என்றான், அப்படித்தான் இன்றைக்கும் நல்லவர்கள், அருமையானவர்கள், அருமையான போதகர் பலர் இருக்கின்றனர். இந்நாளுக்குரிய வாக்குத்தத்தத்தின் இயற்கைக்கு மேம்பட்ட உறுதிப்படுத்துதல் வழக்கத்திற்கு மாறாக அமைந்துள்ளதால், அவர்களை அது திகைக்கச் செய்துவிடுகிறது. அது தேவனுடைய விசேஷ குணங்களை வெளிப்படுத்துவதால் அப்படிச் செய்யும். 16அவள் கணவனான யோசேப்பு நீதிமானாயிருந்தபடியால், அவளை அவமானப்படுத்த அவனுக்கு மனதில்லை. அவனால் அதை நம்பமுடியவில்லை. அது உண்மையென்று நம்ப அவன் முயன்றான். அவன் இப்படி சிந்தித்துக் கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் அவனுக்குச் சொப்பனத்தில் காணப்பட்டு அவனுடன் பேசினான். அவர் எப்பொழுதும் சொப்பனத்தில் தான் பேச வேண்டும் என்பதில்லை. நீங்கள் போதிய உத்தமமுள்ளவர்களாயிருந்தால், அவர் தம்மை வார்த்தையின் மூலம் வெளிப்படுத்தி, அது உண்மையென்பதை அவரால் காண்பிக்க முடியும். அப்பொழுது, தேவனுடைய விசேஷ குணங்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ள வார்த்தைக்கு ஏற்ப தம்மை வெளிப்படுத்துகின்றன என்பதை நீங்கள் கண்டு கொள்வீர்கள். வேறொரு விஷயம். தேவனுடைய வார்த்தை எப்பொழுதுமே தவறை சரிபடுத்தும், அது உண்மையென்று நீங்கள். நம்புகிறீர்களா? வார்த்தை அதை முடிவுபடுத்துகிறது. தேவன் தமது வார்த்தையை உறுதிபடுத்தும்போது, அத்துடன் அது முடிவு பெறுகிறது. என் மனதிலுள்ள ஒன்றை இப்பொழுது கூற விரும்புகிறேன். நாம் அதிக நேரம் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. ஏனெனில் நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கப் போகிறோம். இயேசு வார்த்தையென்று வேதம் கூறுகிறது. அவர் வார்த்தையென்பதை நாமெல்லோரும் ஒப்புக் கொள்கிறோம். அவர் பள்ளிக்கு சென்றதாக எங்கும் எழுதி வைக்கப்படவில்லை. ஆனால் அவர் பன்னிரண்டு வயது பையனாயிருந்த போது, அவருடைய பெற்றோராகிய யோசேப்பும் மரியாளும் பஸ்காவை ஆசரிப்பதற்கென அவருடன் ஆலயத்திற்கு சென்றனர். அது முடிந்த பிறகு, அவர்கள் வீடு திரும்பினர். அது மூன்று நாள் பயணமாயிருந்தது. அவர்கள் இயேசுவை எங்கும் தேடியும் காணவில்லை. பின்பு அவர்கள் பயணப்பட்டு அவரைத் தேடிச் சென்றனர். முடிவில், மூன்று நாட்களுக்குப் பின்பு அவரைக் கண்டனர். அப்பொழுது அவர் போதகர்களுடன் தேவனுடைய வார்த்தையைக் குறித்து தர்க்கித்துக் கொண்டிருந்தார். 17மரியாள் என்ன கூறினாள் என்று கவனியுங்கள். அவளைத் தெய்வமாக கருதுபவர்களே, இதைக் கவனியுங்கள். தொடக்கத்தில் அவள் ஏமாற்றமடைந்தாள். அவளை சற்று கவனியுங்கள். இதை நீங்கள் முன்பு கவனிக்காமலிருந்தால், இப்பொழுது கவனியுங்கள், அவள், ''இதோ, உன் தகப்பனும் (Father) நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே'' என்றாள் (லூக்: 2:48). பாருங்கள், அந்த போதகர்கள் முன்னிலையில் அவளுடைய சாட்சியை அதாவது, அவள் பரிசுத்த ஆவியானவரால் கர்ப்பவதியானாள் என்னும் சாட்சியை அவளே குலைத்துக் கொண்டாள். அவள் யோசேப்பை அவருடைய தகப்பன் என்று குறிப்பிட்டாள். அந்த மணி நேரத்துக்குரிய வார்த்தையாகிய அந்த பன்னிரண்டு வயது சிறுவன் என்ன உத்தரவு அருளினார் என்பதைக் கவனியுங்கள். அவரே அந்த மணி நேரத்துக்கென வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையாக, அபிஷேகம் பண்ணப்பட்ட மேசியாவாக, இருந்தார். அவர் என்ன கூறினார் என்பதைக் கவனியுங்கள்: “என் பிதாவுக்கடுத்தவைகளில் [Father's business) நான் இருக்க வேண்டுமென்று அறியீர்களா? லூக்: 2:49. வார்த்தை தவறை திருத்துகின்றது. பாருங்கள், இயற்கைக்கு மேம்பட்ட அந்த பன்னிரண்டு வயது சிறுவனை இயேசு என்ன கூறினார் என்பதை அவரே புரிந்து கொள்ளவில்லையென்று நினைக்கிறேன். ஆனால் அவர் வார்த்தையாயிருந்த காரணத்தால், வார்த்தை தவறைதிருத்தினது. பாருங்கள், அவர் தமது தாயையே திருத்தி அவள் கூறின தவறினிமித்தம் அவளைக் கடிந்து கொண்டார். அவர் பிதாவுக்கடுத்தவைகளில் இருந்ததாக கூறினார். யோசேப்பு அவருடைய பிதாவாக (தகப்பனாக) இருந்திருந்தால், அவனுடன் கூடதான் அவர் இருந்திருக்க வேண்டும். பாருங்கள், அவள் ஏவாளைப் போல் உணர்ச்சிவசப்பட்டவளாய், “உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே'' என்றாள். அவரோ, “என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்க வேண்டுமென்று அறியீர்களா?'' என்றார். பாருங்கள் வார்த்தை எப்படி தவறை திருத்துகிறதென்று. வார்த்தை தவறை திருத்துகிறது. பிசாசு இயேசுவை சோதித்த போது ஒரு தவறை செய்தான். அவர் தம்முடைய சொந்த வார்த்தையைக் கொண்டே அவனுக்கு பதிலளித்து, வார்த்தையினால் அவனை வென்றார். 18“பூர்வகாலங்களில் பங்கு பங்காகவும் வகை வகையாகவும் தம்மை தீர்க்கதரிசிகளிடம் ஒன்றுபடுத்திக் கொண்ட தேவன், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன்'' என்று வேதம் கூறுகிறது. தீர்க்கதரிசிகளாகிய மனிதர்களுடன் தம்மை ஒன்றுபடுத்திக் கொண்டு அவர்களுடன் அவர் பேசின போது, தமது விசேஷ குணங்களை அவர் வெளிப்படுத்தினார். தீர்க்கதரிசிகள் கண்ட தரிசனத்தில் தேவனுடைய விசேஷகுணங்கள் உறுதிபடுத்தப்பட்டன. எந்த மனிதனும் தரிசனம் எப்படி உண்டாகின்றது என்பதை விளக்க முடியாது. அப்படிச் செய்ய வழியில்லை. அது இயற்கைக்கு மேம்பட்ட ஒன்று. நடந்தவைகளையும், நடக்கிறவைகளையும் நடக்கப் போகிறவைகளையும் நாம் தரிசனத்தில் காண்கிறோம். ஒரு மனிதனை தேவன் அனுப்பி, அவனுக்கு தரிசனத்தில் காண்பிக்கப்பட்ட அந்த வரப்போகும் காரியங்களை (அவன் இன்றிரவு மாத்திரமல்ல) ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு சமயமும் எடுத்துக் கூற தேவன் கடைபிடிக்கும் முறையாகும். இது. அவன் கூறும் ஒவ்வொன்றும் தேவனிடமிருந்து புறப்பட்டு வந்து, அது தேவனுடைய வார்த்தையாய் திகழ்கிறது. 19“தேவனுடைய கிருபை வரங்களும் அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே'' (ரோமர்: 11:29). உங்கள் நீல நிறக்கண்களை பழுப்பு நிறக் கண்களாக நீங்கள் மாற்ற முடியாது. நீங்கள் நான்கு அடி உயரமாக இருந்தால், ”உங்களை ஆறு அடி உயரமுள்ளவர்களாக மாற்றிக் கொள்ளமுடியாது. கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?''(மத். 6:2). நீங்களும் நானும் தேவனுடைய கிருபையினால் அவ்விதமாக இருக்கிறோம். தேவனுடைய கிருபை வரங்களும் அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே. இந்த தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசிகளாகவே பிறந்தனர். மோசே அழகுள்ள குழந்தையாக பிறந்தான். உலகத் தோற்றத்துக்கு முன்னமே இயேசு தேவனுடைய குமாரனாக தேவனுடைய தன்மையாக இருந்தார். எரேமியா அவன் பிறப்பதற்கு 712 ஆண்டுகட்கு முன்னரே வனாந்தரத்திலே கூப்பிடுகிவனுடைய சத்தமாக இல்லை. மன்னிக்கவும், ஜாதிகளுக்கு தீர்க்கதரிசியாக நியமிக்கப்பட்டு அவனுடைய தாயின் கர்ப்பத்திலேயே அதற்கென்று பரிசுத்தமாக்கப்பட்டு தெரிந்து கொள்ளப்பட்டான். நான் மனதில் கொண்டிருந்தது யோவான ஸ்நானனாகும். அவன் பிறப்பதற்கு 712 ஆண்டுகட்கு முன்னரே அவன் வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருந்தான். 20பாருங்கள், அது தேவனால் நியமிக்கப்பட்டதாயுள்ளது. அவர் ஒரு மனிதனை அனுப்பி, அக்காலத்துக்குரிய வார்த்தையாக அவனை ஆக்குகிறார். நீங்கள் உங்கள் காலத்துக்குரிய வார்த்தையை விசுவாசிக்கும் முன்பே அவருடைய விசேஷ குணங்களுடன் அவனை ஒன்றுபடுத்திக் கொண்டு தரிசனத்தின் மூலமாக அவனுக்கு ஞானத்தையளிக்கிறார். அவனும் என்ன நடக்கப் போகிறதென்பதை தீர்க்கதரிசனமாக உரைக்கிறான்; அது நிறைவேறுகிறது, ''அது நிறைவேறுவதை நீங்கள் காணும் போது, அவன் தேவனுடைய வார்த்தையின் வியாக்கியானத்தைப் பெற்றிருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஏனெனில் தேவனுடைய வார்த்தை அவனிடத்தில் வந்துள்ளது'' என்று தேவன் உரைத்திருக்கிறார். அது தான் அவனுடைய சான்றுகள் (credentials). அவன் தீர்க்கதரிசியாக பழைய ஏற்பாட்டில் அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறான். இது மிகவும் தெளிவாக உள்ளது. அவருடைய விசேஷ குணங்கள் அங்கு அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு, அவை வெளிப்படுகின்றன. அவ்விதமாகத்தான் தேவன் ''பூர்வ காலங்களில்'' ஈடுபட்டார். வேதம் அப்படி கூறுகிறது, பங்கு பங்காகவும் வகை வகையாகவும் தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன் இந்தக் கடைசி நாட்களில் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய்த் திருவுளம் பற்றுகிறார். யோவான்: 10:37ல் இயேசு, என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை'' என்றார். பாருங்கள், அவர்கள், '' நீ ஒரு மனிதன், உன்னை தேவனாக்கிக் கொள்கிறாய்“ என்றனர். அவரோ, “என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. என்றார். மேலும் அவர், ''யோவான் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான். நீங்களும் சில காலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள். ஆனால் அவனோ, ”அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும் என்றான்'' என்றார். அவரே உலகத்திற்கு ஒளியாயிருந்தார். ஏனெனில் அவரே மாமிசத்தில் வெளிப்பட்ட, உறுதிபடுத்தப்பட்ட, அடையாளம் கண்டுகொள்ளப்பட்ட வார்த்தையாயிருந்தார். பாருங்கள், “அவர் நம்மோடிருக்கும் தேவன்''. 21தீர்க்கதரிசிகள் ஜனங்களோடுள்ள தேவனாயிருந்தனர் இயேசு அவ்வாறு கூறினார்: ''தேவ வசனத்தைப் பெற்றுக் கொண்டவர்களைத் தேவர்கள் என்று அவர்கள் சொல்லியிருக்க என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவ தூஷணம் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா? (யோவான்: 10:35-36). பாருங்கள்? தேவனால் பேசப்படும் வார்த்தை எங்கு உறுதிப்படுத்தப்படுகிறதோ, அதுவே தேவன் தமது விசேஷ குணங்களினால் தம்மை வெளிப்படுத்தி வார்த்தையை நிறைவேற்றுவதாகும். அதற்கு வியாக்கியானம் எதுவும் தேவையில்லை. அது ஏற்கனவே தன்னை வியாக்கியானம் செய்து, அது என்னவென்பதை நிரூபிக்கிறது. “வெளிச்சம் உண்டாகக் கடவது'' என்று அவர் கூறினபோது வெளிச்சம் உண்டானது. ”அதன் அர்த்தம் எனன?'' என்று நீங்கள் கேட்கவேண்டிய அவசியமில்லை. என்ன கூறப்பட்டதோ அதுதான் அதன் அர்த்தம். வெளிச்சம் தோன்றினதால் அது உறுதிப்படுத்தப்படுகிறது. அது ஏற்கனவே நிறைவேறிவிட்டது. “என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால்'' என்று இயேசு கூறினார். வேறுவிதமாகக் கூறினால், என் பிதாவின் விசேஷ குணங்களை நான் உடையவனாயிராமலிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. அவைகள் நான் யாரென்பதை காண்பிக்கின்றன. என்னை விசுவாசியாமற் போனாலும், ”இந்த அடையாளத்தையாவது விசுவாசியுங்கள். என தன்மைகள் எனக்கு அளிக்கப்பட்டுள்ள அந்த ஸ்தானத்துடன் ஒன்றுபடாமலிருந்தால், நான் யாரென்று உரிமை கோருவதை நீங்கள் விசுவாசிக்க வேண்டாம்'', பாருங்கள்? இன்றிரவு உங்களுக்கு புரிந்துவிட்டதா? உங்களில் எத்தனை பேர் புரிந்து கொண்டீர்கள் கைகளையுயர்த்துங்கள். பாருங்கள், “என தன்மைகள் நான் யாரென்று உரிமை கோருவதை அடையாளம் காண்பிக்காமல் போனால்'' என்றார் இயேசு. என்னை விசுவாசிக்க முடியாவிட்டாலும், ”நான் யாரென்று அடையாளம் காட்டுகிறதையாவது விசுவாசியுங்கள்'' 22யோவான்: 14:12-ல் இயேசு, “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்'' என்றார். கவனியுங்கள், ”என்னை விசுவாசிக்கிறவன'', ஒரு உண்மையான விசுவாசி, “நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்''. வேறு விதமாகக் கூறினால், என்னை விசுவாசிக்கிறவன் என்னுடைய விசேஷ குணங்களினால் - கிரியைகளினால் - அடையாளம் கண்டு கொள்ளப்படுவான்''. அவர் அதை தான் செய்தார். ”என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால் நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை''என்றார். பிதா தீர்க்கதரிசிகளிடம் பேசினார். அதுவே அவர்களுடைய அடையாளமாயிருந்தது. இயேசுவுக்கும் அவ்விதமாகவே இருந்தது. விசுவாசிக்கிறவனுக்கு அது வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ளது. என் விசேஷ குணங்கள் எனக்குள் இருந்து கொண்டு கிரியை செய்தது போல், அவனுக்குள் இருந்து கொண்டு கிரியை செய்யும். என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், “நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. கிரியைகளை நான் செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள். ஏனெனில் அவ்விதம் கூறப்பட்டுள்ளது. அது நிறைவேறியே ஆக வேண்டும்''. அவர், ''வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே'' என்றார் (யோவான்: 5:39). அது இயேசு. தேவன் அவரில் வெளிப்பட்டு, “அவர் யாரென்பதைக் காண்பித்தார். நான் யாரென்று அவை சாட்சி கொடுக்கின்றன''. அது எபிரேயர்: 1:1-க்கு விளக்கம் தருகிறது. சில பூர்வகாலங்களில் தேவன் தீர்க்கதரிசிகளின் மூலமாய் திருவுளம் பற்றினார். இப்பொழுது அவர், தமது குமாரன் உயிர்த்தெழுந்தார் என்பதை நிரூபிக்க, அவருடைய விசேஷ குணங்களை வெளிப்படுத்தி வருகிறார். தேவன் அப்பொழுது தீர்க்கதரிசிகளின் மூலமாய் திருவுளம் பற்றினார். இப்பொழுது குமாரன் மூலமாய் திருவுளம் பற்றுகிறார் - என்றென்றும் மாறாத தேவன், ”அதே விசேஷ குணங்கள். நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்''. தேவன் தமது விசேஷ குணங்களினால் அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறார். அப்படித்தான் அவரைக் கண்டு கொள்ள முடியும். நீங்கள், “நான் இதை போதிக்கிறேன், நாங்கள் இதை பாடுகிறோம். இதை செய்கிறோம்'' எனலாம். அதைக் குறித்து நான் இங்கு பேசவில்லை. வார்த்தை வெளிப்பட்டு, அந்த ஜீவனைக் காண்பித்து, இக்காலத்துக்கென வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையின் விசேஷ குணங்களைப் பற்றித் தான் கூறிக் கொண்டிருக்கிறேன். பரிசேயர்கள் இக்காலத்து போதகர்களைக் காட்டிலும் வேதத்தை நன்கு அறிந்திருந்தனர். அவர்கள் அதன்படி வாழ வேண்டியவராயிருந்தனர். அவர்களுடைய முப்பாட்டனார்கள் ஆசாரியர்கள். அவர்கள் இரவும் பகலும் வேதத்தை படித்திருந்தும், வார்த்தை வெளிப்பட்ட போது அதை அடையாளம் கண்டு கொள்ளத் தவறினர். 23இன்றைக்கு லூத்தரன்கள், “நீங்கள் விசுவாசித்தால் அதை பெற்றுக் கொண்டீர்கள்'' என்கின்றனர். மெதோடிஸ்டுகள், ”நீங்கள் கூச்சலிட்டால் அதை பெற்றுக் கொண்டீர்கள்'' என்கின்றனர். பெந்தெகொஸ்தேயினர், “நீங்கள் அந்நிய பாஷை பேசினால் அதை பெற்றுக் கொண்டீர்கள்'' என்கின்றனர். அவையனைத்தும் தவறென்று நமக்குத் தெரியும். வேறு சிலர், ”ஆவியின் கனிகள் காணப்பட்டால் அதை பெற்றுக் கொண்டீர்கள்'' என்கின்றனர். அதுவும் தவறு. ஒரே ஒரு சான்று என்னவென்றால், உறுதிப்படுத்தப்படுதல் - அதாவது, தேவன் தாமே அந்த நேரத்திற்காக வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ள வார்த்தையுடன் தம்மை ஒன்றுபடுத்திக் கொள்ளுதலே. அதுதான். அந்த ஆசாரியர்களை விட ஆவியின் கனிகளைப் பெற்றவர் வேறு யார்? அவர்கள் குழந்தைகளை விருத்ததேனம் செய்து, அவர்களை ஆசிர்வதித்து. இத்தகைய செயல்களில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயம் இயேசு வந்து, பலிபீடத்தையெல்லாம் உதைத்து தள்ளி, அவர்கள் மேல் கோபங் கொண்டு, அவர்களை தேவாலயத்திலிருந்து அடித்து துரத்தினார். அவரிடம் எந்த அடையாளமும் (identification) அப்பொழுது இல்லை. வேதவாக்கியங்களே அவருடைய அடையாளமாக இருந்தன. அவரிடம் ஐக்கியச் சீட்டு எதுவும் இருக்கவில்லை. அவர் எந்த ஸ்தாபனத்தையும் சேர்ந்திருக்கவில்லை. ஆனால் தேவன் அவரைக் குறித்து உரைத்திருந்தார். அதுவே அவருடைய அடையாளம். அது தான் எல்லா காலத்திலும் அடையாளமாக இருந்து வந்துள்ளது. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேவனுடைய வார்த்தையே தேவனுடைய விசேஷ குணங்களுடன் ஒன்றுபட்டு அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறது. தேவன் வார்த்தையாயிருக்கிறார், அந்த வாக்குத்தத்தத்தின் விசேஷ குணங்கள் அடையாளம் கண்டு கொள்ளப்படும் போது, அதுவே ஒருவனை விசுவாசியாகச் செய்கிறது. இயேசு அப்படி சொன்னார். அது தான் அதன் முடிவு. ஆமென். கவனியுங்கள், அவருடைய விசேஷ குணங்கள் அவரை அடையாளம் காண்பிக்கின்றன என்று நாம் பார்த்தோம், “சேவைகளை நான் செய்யாதிருந்தால், என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை'' என்று அவர் கூறினார். அவைகள் தம்மை அடையாளம் காட்டும் என்று இயேசுவே கூறியுள்ளார். 24இப்பொழுது கவனியுங்கள், இந்த கடைசி நாட்களில் எபிரேயர்: 1:1 இப்படி கூறுகின்றது. பூர்வகாலங்களில் பங்கு பங்காகவும் வகை வகையாகவும் தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலமாய் திருவுளம் பற்றுகிறார். பாருங்கள்? தேவன் முன் காலங்களில் செய்த வண்ணமாகவே இக்காலத்திலும் வெளிப்பட்டு, அதே விசேஷ குணங்களை உபயோகித்து, அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறார். ஆமென். எபிரேயர்: 13:8, அவர் நேற்றும், (பூர்வ காலங்களில்) இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று கூறுகிறது - அதே விதமாக. அதே விசேஷ குணங்கள். எல்லாம் அப்படியே உள்ளன. என்றென்றும் மாறாத தேவன் தமது கட்டளைகளை மாற்றிக் கொள்ள முடியாதது போலவே, தமது விசேஷ குணங்களையும் மாற்றிக் கொள்ள முடியாது. அது தான் அவர். அவர் வார்த்தையாயிருக்கிறார். இந்நேரத்துக்கும் அவர் வார்த்தையாயிருக்கிறார். அவர் உலகத்தை சிருஷ்டித்த போதும் வார்த்தையாயிருந்தார். மனிதனை சிருஷ்டித்ததும் வார்த்தையே - அவருடைய பண்புகள். ஆனால் அவர் இயேசுவை சிருஷ்டித்த போது அது தேவன், இம்மானுவேல் அவரை அவர் இரட்சகராக ஆக்கினபோது, அது அவருடைய பண்புகள் (attributes), அவரை அவர் சுகமளிப்பவராக ஆக்கினபோது, அது அவருடைய பண்புகள். பாருங்கள், எப்பொழுதுமே வார்த்தை தேவனுடைய விசேஷ குணங்களினால் அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறது - ஒவ்வொரு முறையும் அதே விதமாக அவர் ஒரு போதும் மாறுவதில்லை. 25ஆபிரகாமிடம் வந்த மூன்று பேர்களை கவனியுங்கள். அவன் பகலில் கூடார வாசலில் உட்கார்ந்து கொண்டிருந்தான். அவர்களை சில நிமிடங்கள் கவனிப்போம். ஆபிரகாம் கல்தேயர் தேசத்திலுள்ள ஊர் என்னும் பட்டினத்திலிருந்து வெளியே அழைக்கப்பட்டவன். எல்லா அவிசுவாசத்தினின்றும் அவன் தன்னை பிரித்துக் கொள்ள வேண்டுமென்று தேவனிடமிருந்து அவன் கட்டளை பெற்று, அங்கிருந்து வெளி வந்தான். ஒரு மனிதனை தேவன அழைக்கும்போது, அவன் அவிசுவாசத்தினின்று தன்னை பிரித்துக் கொள்ள வேண்டுமென்று கருதுவதே தேவனுடைய முதலாம் விசேஷ குணமாயுள்ளது. இயற்கை சிந்தை முற்றிலும் விசுவாசிக்க முடியாத ஒன்றை அவர் அவனுக்களித்தார். ஆபிரகாமுக்கு அப்பொழுது எழுபத்தைந்து வயது; சாராளுக்கு அறுபத்தைந்து வயது. அவள் அவனுக்கு ஒன்றுவிட்ட சகோதரி. அவர்களிருவரும் அத்தனை ஆண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்தும் கூட, அவர்களுக்கு குழந்தை இல்லாமலிருந்தது. அவர் அவனிடம், “நான் சாராளின் மூலம் உனக்கு ஒரு குழந்தையைத் தருவேன். அவன் மூலம் நீ அநேக ஜாதிகளுக்கு தகப்பனாவாய்'' என்றார், ஆபிரகாம் அதை விசுவாசித்தான். 26ஆண்டுகள் கடந்தன. சாராளிடம் எவ்வித மாறுதலும் ஏற்படவில்லை, பாருங்கள்? ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு அவளுக்கு நின்றுபோயிருந்தது. அவளுக்கு அப்பொழுது அறுபத்தைந்து வயது ஸ்திரீகளுக்குள்ள அந்த வழிபாடு அவளுக்கு நின்றுபோய் அநேக ஆண்டுகளாயின. ஆபிரகாமுக்கு எழுபத்தைந்து வயது. அவனுடைய சரீரமும் சாராளுடைய கர்ப்பமும் செத்து போயிருந்தன. அப்படியிருந்தும் ஆபிரகாம் தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவிசுவாசமாய் சந்தேகப்படாமல் முழு நிச்சயமாய் நம்பினான். ஏனெனில் தேவன் அவ்வாறு வாக்களித்திருந்தார். ''தேவன் அவ்விதம் கூறியிருப்பாரானால், அவர் கூறினதை அவருடைய விசேஷ குணங்கள் நிறைவேற்றும்“ என்று அவன் நம்பினான். நாம் எல்லோரும் ஆபிரகாமின் பிள்ளைகளாக - ஆபிரகாமின் சந்ததியாராக இருக்கிறோம். இருபத்தைந்து ஆண்டுகள் கழிந்தன. ஆயினும் சாராளில் எவ்வித மாற்றமும் இல்லை. அவளுக்கு வயது சற்று அதிகமானது என்று மாத்திரமே. அவளுக்கு தோள்கள் சற்று சரிந்து போயின. அவ்வாறே ஆபிரகாமுக்கும் வயது சற்று அதிகமானது. ஆயினும் ஆபிரகாம் அதை விசுவாசித்தான். 27தம்முடைய ஊழியக்காரன் இன்றுள்ள மக்களுக்கு திருஷ்டாந்தமாக இருப்பான் என்று தீர்மானம் கொண்டுள்ளான் என்பதை தேவன் அறிந்து, அவன் மூலமாக அவர் எல்லா ஜாதிகளையும் ஆசிர்வதிப்பதாக அவர் உறுதி கொண்டார். ஒரு நாள் உஷ்ணமான பகல் வேளையில், சுமார் 11 மணியளவில், மூன்று பேர்கள் அவனிடம் வந்தனர். அவர்கள் சாதாரண மனிதரை காட்டிலும் வித்தியாசமானவர்களாயிருந்தனர் ஆவிக்குரிய காரியங்களை ஆவிக்குரிய காரியங்கள் மாத்திரமே அறிந்து கொள்ள முடியும். கவனியுங்கள், அவர்கள் அங்கு வந்து உட்கார்ந்தனர். ஆபிரகாம் அவர்களை நோக்கி, ''என் ஆண்டவனே'' என்றான். அவர்களில் இருவர் சோதோமுக்குச் சென்று அங்கு பிரசங்கம் செய்தனர். இன்றைய காலத்திற்கு அது சாட்சியாக அமைந்துள்ளது. அங்கு தான் மூவகை சாராரைக் காணலாம். சோதோமும் அங்குள்ள சபையும், தெரிந்து கொள்ளப்பட்ட ஆபிரகாம். சோதோமில் இல்லை. இரண்டு தூதர்கள், நவீன பில்லி கிரஹாமும்... கவனியுங்கள். இதுவரை சபைக்கு தூதர்களாக அனுப்பப்பட்டவர்களில் யாருடைய பெயரும் இதற்கு முன்பு 'ஹோம்' என்பதில் முடிவடையவில்லை. ஃபின்னி, சாங்கி, நாக்ஸ் கால்வின், பில்லி சண்டே போன்ற பெயர்களே உண்டாயிருந்தன. 'கிரஹாம்' என்று “ஹாம்” என்பதில் முடிவடையவில்லை. 'ஹாம்' என்றால் 'ஜாதிகளுக்கு தகப்பன்' என்று அர்த்தம். பில்லி கிரஹாம் அங்கு சென்று பிரசங்கித்தார். இந்த நேரத்தை கவனியுங்கள். இங்கு தான் பாவனை விசுவாசிகள், அவிவாசிகள், விசுவாசிகள் என்னும் மூவகை சாராரைக் காணலாம். இந்த மூன்று பேர் வந்தனர். இரண்டு பேர் பட்டினத்திற்குள் சென்று - நவீன பில்லி கிரஹாமும், ஓரல் ராபர்ட்ஸும், மக்களிடம் பிரசங்கித்தனர். இயேசு இந்த அமைப்பை குறிப்பிட்டார். 28பாருங்கள், தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் - ஆபிரகாமும் அவன் குழுவும் - அதற்கு வெளிப்புறத்தில் இருந்தனர். ஆபிரகாமுடன் தங்கின மனிதனைச் சற்று கவனியுங்கள், அவர் தேவனுடைய விசேஷ குணத்தை வெளிப்படுத்தினார். அவர் “சாராள் எங்கே?'' என்று கேட்டார். அதற்கு முந்தின நாள் அவளுடைய பெயர் ”சாராய்'' என்று இருந்தது. இப்பொழுது அது “சாராள்'' என்று மாறியது. அவர் அவனை ”ஆபிரகாம்'' என்று அழைத்தார் - “ஆபிராம்” என்றல்ல. ஆபிரகாமே, “உன் மனைவியாகிய சாராள் எங்கே?'' அவன், ''உமக்கு பின்புறத்தில் கூடாரத்தில் இருக்கிறாள்“ என்றான். அவர், ''நான் உன்னிடத்தில் திரும்ப வருவேன்'' என்றார். அவன் பேசுவதை ஆபிரகாம் கேட்டான். ஒரு உற்பவ கால திட்டத்தில் உன்னிடத்தில் வருவேன். இதைக் கேட்ட சாராள் தன் உள்ளத்தில் நகைத்தாள். அவள், ''நான் கிழவியும் என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு, வாலிப தம்பதிகளைப் போல் எங்களுக்கு இன்பம் உண்டாயிருக்குமோ? அவ்விதம் தொடர்பு கொண்டு எத்தனையோ ஆண்டு காலம் ஆயிற்றே'' என்று எண்ணினாள். அவள் நகைத்தாள். அந்த மனிதன் ஆபிரகாமைப் பார்த்தார். சாராள் அவருக்குப் பின்னால் கூடாரத்தில் இருந்தாள். அவர் ஆபிரகாமை நோக்கி, “சாராள் நகைத்து, இது எப்படி முடியும் என்று சொல்வானேன்?'' என்றார். அவர் தம்மை அடையாளம் காண்பித்தார். ஆபிரகாம் அவரை “ஏலோஹிம்'' என்று அழைத்தான். வேதம் படித்துள்ள உங்கள் ஒவ்வொருவருக்கும் அது தெரியும். ஏலோஹிம், தேவன், எல்லாம் வல்ல தேவன் ஒரு மனித சரீரத்தில் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு, கன்று குட்டியின் இறைச்சியைப் புசித்து, மாட்டின் பாலைக் குடித்து, ரொட்டியையும் வெண்ணெயையும் தின்றார், இந்த ஏலோஹிம் தேவனுடைய விசேஷ குணங்களை வெளிப்படுத்தினார். ஆபிரகாம் அவரை ”தேவன்'' என்றழைத்தான். என்ன? ஏலோஹிம் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டார். 29லூக்கா: 17-ம் அதிகாரத்தில் இயேசு, இந்த கடைசி நாட்களில் (பூர்வ காலங்களில் தீர்க்கதரிசிகளின் மூலமாய் திருவுளம் பற்றின தேவன் இந்த கடைசி நாட்களில் குமாரன் - மூலமாய் திருவுளம் பற்றினார்). இப்பொழுது கவனியுங்கள்; அவர், “மனுஷ குமாரன் வெளிப்படும் நாளில்'' என்றார். கவனியுங்கள் - ”வெளிப்படும் நாளில்“ முடிவு காலத்திற்கு முன்புள்ள இந்த கடைசி நாட்களில் மனுஷ குமாரன் வெளிப்படும்போது சோதோமின் அமைப்பு திரும்ப வரும். சோதோமின் நாட்களில் நடந்தது போல, ”மனுஷ குமாரனுடைய வருகையில் அவர் வெளிப்படும் போது; சபைக்கு - அதாவது தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு வெளிப்படும்போது (சோதோமுக்கு அல்லது சோதோமிலுள்ளவர்களுக்கு அல்ல) - தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு வெளிப்படும்போது நடக்கும்''. ஆபிரகாம் தெரிந்து கொள்ளப்பட்டவன். ஆபிரகாமின் ராஜ ரீக சந்ததியார் வார்த்தையாகிய கிறிஸ்து இயேசுவின் மூலம் விசுவாசிகளாக - தெரிந்து கொள்ளப்பட்டவர்களாக - ஆகின்றனர். மனுஷ குமாரன் வெளிப்படும்போது அதே அமைப்பு திரும்ப காணப்படும். 30இன்றைய உலகத்தைப் பாருங்கள். அது போன்ற சோதோம் கொமோரா வேறொன்றை நான் கண்டதில்லை. அது சோதோம் கொமோரா தான். ஸ்தாபனங்களைப் பாருங்கள். லோத்து அங்கு அமர்ந்து கொண்டு, சோதோமின் பாவங்களுக்காக தனது நீதியான ஆத்துமாவை வருத்தப்படுத்திக் கொண்டது போல, இன்று அநேக போதகர்கள் - மிகவும் அருமையானவர்கள் - தங்கள் படிக்கும் அறையில் அமர்ந்து கொண்டு பிரசங்கத்தை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில், வெளியே நோக்கி, பெண்கள் ஒழுக்கங்கெட்டவர்களாய் அரைகால் சட்டை அணிந்து தெருவில் நடந்து செல்வதையும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை கண்ட பின்பும், அதைக் குறித்து ஏதாகிலும் பேசினால் அவர்களுடைய ஸ்தாபனம் அவர்களைப் புறம்பாக்கிவிடும் என்ற பயத்தினால் ஒன்றுமே பேசாமல் இருக்கும் நிலையைக் காணும்போது அவ்வாறே லோத்துக்கும் நீதியான காரியங்களுக்காக நிற்க துணிவு இல்லாமற் போயிற்று. நவீன சோதோமும் கொமோராவும் அவ்வாறே இன்றுள்ளது. ஆனால் சிலர் சோதோமுக்கு வெளியே உள்ளனர். அவர்கள் புருஷனுடைய சித்தத்தினால் பிறவாமல் தேவனுடைய சித்தத்தினாலே அங்கு பிறந்து தேவனுடைய வித்துக்களாயுள்ளனர். அங்கு அவருடைய அடையாளத்தை கவனியுங்கள். பிரசங்கம் அல்ல, அந்த அடையாளம் தேவனுடைய வார்த்தையானது ஒரு மனிதனில் மாமிசமாக்கப்பட்டதை வெளிப்படுத்துகிறது. அந்த நாளில் இருந்த அதே அமைப்பு இந்த நாளில் அப்படியே திரும்ப வந்துள்ளது. எல்லாமே பிழையின்றி தெளிவாகப் பொருந்தியுள்ளது. அதைக் குறித்து சில நிமிடங்கள் தொடர்ந்து பேச நமக்கு சமயமிருந்தால் நலமாயிருக்கும்! ஆனால் நமக்கு சமயமில்லை. நாம் துரிதப்பட வேண்டும். இந்த கடைசி நாட்களில் அதே அமைப்பு திரும்ப வரவேண்டியதாயுள்ளது. 31இப்பொழுது எபி: 10:1, தேவன் பூர்வ காலங்களில் தீர்க்கதரிசிகளின் மூலம் தம்மை அடையாளம் காட்டினார். இந்த கடைசி நாட்களில் தமது குமாரன் மூலமாக தம்மை அடையாளம் காண்பித்து, எபி: 13:8-ன் படி, தம்மை நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராக நிரூபிக்கிறார். கவனியுங்கள், தேவன் பூர்வ காலங்களில் மோசேயுடன் பேசினார். அவர் தம்மை எரியும் முட்செடியிலிருந்த ஒளி - அக்கினி ஸ்தம்பத்தின் மூலமாக வெளிப்படுத்தினார். அப்படித்தான் அவர் பூர்வ காலங்களில் செய்தார். அவர் மோசேயுடன் பேசினார். அந்த ஒளி என்ன செய்தது? அது தேவனுடைய விசேஷ குணத்தைக் காண்பித்து தேவனுடைய வார்த்தையைப் பேசினது; எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் கூக்குரலைக் கேட்டேன். அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன். என் வாக்குத்தத்தத்தை நான் நினைவு கூருகிறேன். என் ஜனங்களை விடுவிக்க அக்கினி ஸ்தம்ப வடிவில் ஒளியாக இறங்கி வந்திருக்கிறேன். மோசே, “உன்னை அனுப்புகிறேன்'' என்றார். 32தேவனுடைய விசேஷ குணங்களை கவனியுங்கள். மோசே கையளவு புழுதியை காற்றிலே தூவினான். அது பேன்களாக மாறினது. தேவனுடைய சிருஷ்டிக்கும் தன்மை மோசேக்குள் இருந்தது. உபாகமம்: 18:15-ல் மோசே, “உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை எழும்பப் பண்ணுவார்'' என்று கூறினான். கவனியுங்கள். இது மறுபடியும் வார்த்தையாக அதன் விசேஷ குணமாக - அமைந்துள்ளது. தேவன் மோசேயின் மூலமாக பேசி, அவனைப் போல ஒரு தீர்க்கதரிசியை எழும்பப் பண்ணுவார் என்று கூறுகிறார். இயேசுவின் விசேஷ குணங்கள், எவ்விதம் அவர் தான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட அந்த வார்த்தை என்பதை நிரூபித்தது என்று கவனியுங்கள். அப்படி நடக்கும் என்று மோசே கூறினான். இயேசுவின் விசேஷ குணம் அதை நிரூபித்தது, ”உன் தேவனாகிய கர்த்தர்“ என்று அவன் கூறினதை கவனியுங்கள். அது தேவன், அது வார்த்தை; ''என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை எழும்பப் பண்ணுவார்”. அவரை விசுவாசியாதவர்கள் ஜனங்களின் மத்தியிலிருந்து அறுப்புண்டு போவார்கள். இப்பொழுது கவனியுங்கள். இயேசு வரும்போது எப்படிப்பட்ட விசேஷ குணங்களை உடையவராக அவர் இருந்திருக்க வேண்டும்? பாருங்கள், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தை. அவர் மோசேயைப் போல் ஒரு தீர்க்கதரிசியாயிருப்பார் என்று வாக்களிக்கப்பட்டிருந்தது. 33அவர்களுக்கு எல்லா விதமான போதகர்களும் ரபீகளும் இருந்தனர். மல்கியாவுக்கு பிறகு நானூறு ஆண்டு காலமாக அவர்களுக்கு ஒரு தீர்க்கதரிசி இருக்கவில்லை. ஆனால் இப்பொழுது சடுதியாக ஒரு மனிதன் காட்சியில் வருகிறார். அங்கு இரு மீனவர்கள் இருந்தனர். அவர்களிருவரும் ஒரே மனிதனின் குமாரர்கள். ஒருவன் பெயர் அந்திரேயா. மற்றவன் பெயர் சீமோன். அவர்கள் கவனமாயிருக்க வேண்டுமென்று அவர்களுடைய தகப்பனார் அவர்களுக்கு கற்பித்திருந்தார். ஏனெனில் அப்பொழுது அநேக போலியான காரியங்கள் உண்டாயிருந்தன. அந்த வயோதிபன்... ஒரு சமயம் ஒரு சிறு புத்தகத்தை நான் படிக்க நேர்ந்தது. ஒருக்கால் அது வெறும் கதையாக இருக்கலாம். எனக்குத் தெரியாது. இந்த வயோதிபன் அவன் பிள்ளைகளிடம், ''நாம் எதிர்பார்த்திருக்கும் மேசியாவின் வருகைக்கு முன்பு எல்லா விதமான கள்ள செயல்களும் தோன்றும். ஆனால் நீங்கள் மேசியாவைக் கண்டு கொள்ளக் கூடிய ஒரே வழி, அவர் வேத பிரகாரமாகத் தோன்றுவார். அவர் தீர்க்கதரிசியாயிருப்பர். ஏனெனில் அவர் தீர்க்கதரிசியாயிருப்பாரென்று தேவனுடைய வார்த்தை கூறியுள்ளது'' என்றானாம். 34யோவான் ஸ்நானன் பேசுவதை அந்திரேயா கேட்டான். யோவான் ஸ்நானன் செய்த ஒன்றே ஒன்று, அவன் தீர்க்கதரிசனம் உரைத்தான். இயேசு, “நீங்கள் சிறிது காலம் யோவானின் வெளிச்சத்திலே நடந்தீர்கள். ஆனால் என்னிடம் யோவானைக் காட்டிலும் பெரிய வெளிச்சம் உள்ளது. யோவானைக் காட்டிலும் என்னிடம் பெரிய கிரியைகள் உள்ளன. நான் செய்ய வேண்டுமென்று பிதா எனக்கு அளித்திருக்கும் கிரியைகளே என்னைக் குறித்து சாட்சி கொடுக்கின்றன'' என்று கூறினார் என்பது உங்களுக்குத் தெரியும். யோவான் ஸ்நானன் பிரசங்கம் மாத்திரம் செய்தான், அவன் ஒரு முன்னோடியாக இருந்தானேயன்றி, அற்புதங்களை செய்யவோ, அல்லது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேவனுடைய விசேஷ குணங்களை வெளிப்படுத்தவோ இல்லை. ஆனால் இயேசுவோ அந்த விசேஷ குணங்களுடன் தோன்றினார். சீமோன் ஒரு நாள் அவனுடைய பிரசங்கத்தைக் கேட்கச் சென்றான். ஒருக்கால் சீமோன் அந்திரேயாவுடன் சென்றிருக்கக் கூடும். அந்திரேயாவும் அத்தனை நாட்களாக கூட்டத்திற்குச் சென்று கொண்டிருந்தான். ஆனால் சீமோன் அவருடைய சமுகத்தில் வந்த போது இப்பொழுது கவனியுங்கள். அவன் இயேசுவின் சமுகத்தில் வந்தபோது, இயேசு அவனை நோக்கி, “உன் பெயர் சீமோன். நீ யோனாவின் குமாரன்'' என்றார். பாருங்கள்; வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருந்த விசேஷ குணம் அவரில் காணப்பட்டது. அந்த மனிதன் சீமோனுக்கு கையொப்பமிடவும் கூட தெரியாது. அவன் படிப்பறியாதவனும் பேதமையுள்ளவனுமாயிருந்தான் என்று வேதம் கூறுகிறது. ஆனால் அந்த விசேஷ குணம் அவரை அடையாளம் காட்டினபோது, அவன் தன் அவிசுவாசம் அனைத்தையும் உதறித் தள்ளி விட்டு, “அவர் தான் நாம் எதிர் பார்த்துக் கொண்டிருந்த மேசியா'' என்றான். அவன் விசுவாசித்தான். 35அங்கு பிலிப்பு என்னும் பெயர் கொண்ட ஒருவன் இருந்தான். அவன் பட்டினத்திலும், மலைபகுதியிலும், நாட்டுப் புறத்திலும் பதினைந்து மைல் தூரம் ஓடி, நாத்தான்வேல் என்னும் நண்பனை கண்டுபிடித்து, அடுத்த நாள் அவனுடன் கூட அவரிடம் வந்தான். பிலிப்பு நாத்தான் வேலைக் கண்ட போது, அவன் மரத்தடியில் ஜெபம் செய்து கொண்டிருந்தான. பிலிப்பு அவனிடம், “நாங்கள் யாரைக் கண்டோம் என்று வந்து பார். அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே'' என்றான். நாத்தான்வேல், “பார், பார், பார், நாசரேத்திலிருந்து யாதொரு நன்மையும் உண்டாகக் கூடுமோ? அங்குள்ளவர்கள் மிகவும் தாழ்ந்தவராயிற்றே” என்றான். பிலிப்புவோ, ''வந்து பார்'' என்றான். அது தான் மனிதன் ஒருவன் அளிக்கக் கூடிய சிறந்த பதில். வீட்டில் அமர்ந்து கொண்டு குற்றம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். வந்து நீயாகவே கண்டு கொள். வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்! வந்து பார்! 36அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது, என்ன நடந்து கொண்டிருக்கிறதென்றும், அவர் எவ்வாறு சீமோனின் பெயரையும் அவனுடைய தகப்பனின் பெயரையும் பகுத்தறிந்து கூறினார் என்றும் அவர்கள் உரையாடிக் கொண்டு சென்றனர். அதன் பின்பு நாத்தான்வேல் வரிசையில் வந்த போது, ஒருக்கால் அவன் ஜெப வரிசையில் சென்றிருக்கலாம், அல்லது கூட்டத்தில் அமர்ந்திருக்கலாம். எனக்கு தெரியாது. எப்படியாயினும், இயேசுவின் கண்கள் அவன் மீது முதன்முறையாக பட்டன. அவர், ''இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்“ என்றார். அவன், “நீர் என்னை எப்படி அறிவீர்?'' என்றான். அவர், “பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்தி மரத்தின் கீழிருக்கும் போது உன்னைக் கண்டேன்” என்றார். அது தான் அபிஷேகம் பெற்ற தேவனுடைய விசேஷ குணத்தின் அடையாளமாயிருந்தது. அவன், ''ரபீ, நீர் தேவனுடைய குமாரன்“ என்றான். அது என்ன? அவருடைய விசேஷ குணங்கள் அவரை அடையாளம் காட்டின, அவர் தான் அபிஷேகம் பண்ணப்பட்ட மனிதன். தேவன் மாமிசத்தில் அபிஷேகம் பண்ணப்பட்டிருந்தார் என்பதை வேதவாக்கியங்களின் மூலமாக அவன் அறிந்துகொண்டான். தேவன் கிறிஸ்துவுக்குள் வாசம் செய்து, உலகத்தை தம்முடன் ஒப்புரவாக்கிக் கொண்டார். அவன், ''ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா'' என்றான். இயேசு, “அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய்'' என்றார். 37ஆனால் அங்கு நின்றிருந்தவர்களில் அதை விசுவாசியாதவர்களும் இருந்தனர். அவர்கள், “இவன் பெயல்செபூல், இவன் குறி சொல்பவன்'' என்றனர். இயேசு அவர்களை நோக்கி, “உங்களை நான் மன்னித்துவிடுகிறேன். ஆனால் பரிசுத்த ஆவியானவர் வந்து இதே காரியங்களைச் செய்யும்போது அதற்கு விரோதமாகப் பேசப்படும் எந்த ஒரு வார்த்தையும் இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படுவதில்லை'' என்றார். பாருங்கள், அப்பொழுது பலியானது இன்னமும் செலுத்தப்படவில்லை. நியாயத்தீர்ப்பு செய்யாமல் யாரையும் நரகத்தில் தள்ளமுடியாது. இந்த நாடே அவ்விதம் செய்யாது என்னும் போது, தேவனும் அவ்விதம் செய்யமாட்டார். நீங்கள் நியாயத்தீர்ப்பை பெறும் முன்பு சங்கிலிகளினால் கட்டப்பட்டு சிறையில் இருப்பீர்கள். பலியானது அப்பொழுது செலுத்தப்படாமலிருந்ததால், அவர்களை அவர் தள்ளிவிட முடியாது. ஆனால் அவருடைய மரணம், அடக்கம் இவைகளுக்குப் பின்பு பரிசுத்த ஆவி என்னும் அடையாளம் (Token) இரத்தத்திலிருந்து புறப்பட்டு வந்து, அதற்கு விரோதமாகப் பேசுகிறது. அது மன்னிக்கத் தகாத பாவம். அதற்கு விரோதமாய் நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால் கூட போதும், அதற்கு எங்கும் மன்னிப்பு கிடையாது. அதற்கு விரோதமாய் ஒரே ஒரு வார்த்தை அது எவ்வளவு பெரிய காரியமென்று பாருங்கள். அது அவரை அபிஷேகம் பண்ணப்பட்ட மேசியாவாக அடையாளம் காண்பித்தது என்று நாம் பார்க்கிறோம். தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்தார். கடைசி நாட்களுக்காக கிறிஸ்து தம்மை பலியாக செலுத்தினார். நாத்தான்வேல் அதை விசுவாசித்து அவரை அடையாளம் கண்டுகொண்டான். 38ஒரு சமயம் சமாரியா நாட்டிலுள்ள சீகார் என்னும் ஊரிலிருந்த ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ள கிணற்றடிக்கு வந்தாள். இயேசு சமாரியா நாட்டின் வழியாய் போக வேண்டியிருந்ததால் அந்த ஊருக்கு வந்தார். அவர் எருசலேமிருந்து எரிகோவுக்குச் சென்று கொண்டிருந்த போது, சமாரியா நாட்டின் வழியாய் “போக வேண்டியதாயுள்ளது'' என்று கூறினார். அவருடைய பிதா அவரை அங்கு வழி நடத்தினார். அவர் அங்கு அடைந்த போது தம் சீஷர்களை அனுப்பிவிட்டார். அங்கு அவர் அமர்ந்தவராய், என்ன நடக்கப்போகிறது என்று வியந்து கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன. பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி வேறொன்றையும் தாமாய்ச் செய்ய மாட்டார் என்று இயேசு யோவான்: 5:19-ல் கூறினதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். அவர் சொல்வதைக் கேட்ட போது அற்புதத்தை செய்யவில்லை. அவர் செய்கிறதைக் கண்டபோது மாத்திரமே அவர் அற்புதத்தை செய்தார். ''பிதாவானர் செய்யக் குமாரன் காண்கிற வரைக்கும் குமாரன் ஒன்றையும் செய்யமாட்டார்''. பாருங்கள், அவர் யாரென்பதை - அதாவது அவர் தீர்க்கதரிசியென்பதை - அது காண்பிக்கிறது; தேவன் - தீர்க்கதரிசி. அவர் தீர்க்கதரிசியிலும் பெரியவர். அவர் தேவனாயிருந்தார். தீர்க்கதரிசிகள் என்னவாயிருந்தனரோ, அது அனைத்தும் அவருக்குள் இருந்தது - இன்னும் அதிகமாக தீர்க்கதரிசிகள் வார்த்தையின் ஒரு பாகத்தை மாத்திரமே கொண்டிருந்தனர். ஆனால் இவரோ வார்த்தை அனைத்தையும் கொண்டிருந்தார். அவர் வார்த்தையின் பரிபூரணமாக இருந்தார். கவனியுங்கள், “பூர்வ காலங்களில் பங்கு பங்காக - சிறு சிறு பாகங்களாக தேவன் திருவுளம் பற்றி, இந்த கடைசி நாளில் வார்த்தையின் பரிபூரணம் அவருடைய குமாரனாகிய கிறஸ்து இயேசுவுக்குள் வந்து, அவர் நம்மிடையே மாமிசத்தில் வெளிப்பட்ட தேவனாயிருக்கிறார்''. 39இந்த துர்பெயர் கொண்ட ஸ்திரீ - நாம் அத்தகையவளை 'வேசி'யென்று அழைக்கிறோம். அவளை சிறுபிள்ளையாக அவளுடைய பெற்றோர் நடுத்தெருவில் விட்டிருப்பார்கள் - இன்று போல். அது முற்றிலுமாக இளைஞரின் குற்றம் என்று சொல்லிவிட முடியாது. அது பெற்றோரின் குற்றமும் கூட. அவர்கள் அந்த வாலிபப் பெண் அவ்விதம் நடத்தை கெட்டவிதமாய் நடந்து கொள்ள அனுமதித்துவிட்டனர். இந்த சமாரியா ஸ்திரீ மிகவும் அழகுள்ளவளாக இருந்திருக்கக் கூடும். ஒரு வாளி தண்ணீர் மொண்டு கொள்ள அவள் சுமார் 11 மணிக்கு கிணற்றடிக்கு வந்தாள். நீங்கள் கிழக்கத்திய நாடுகளுக்கு எப்பொழுதாகிலும் சென்றிருப்பீர்களானால், அவர்களுடைய பழக்கவழக்கங்கள் சிறிதேனும் மாறவில்லை என்பதை அறிந்து கொண்டிருப்பீர்கள். அவர்கள் அதே வழக்கங்களைக் கடைபிடிக்கின்றனர். பெண்கள் - கன்னிப் பெண்கள் - நேரத்தோடு கிணற்றடிக்குச் சென்று தண்ணீர் மொண்டு கொள்வார்கள். வேசி யாரும் அவர்களுடன் செல்ல முடியாது. அவர்கள் ஒருவருக்கொருவர் கலக்கமாட்டார்கள், மற்றவரெல்லாம் தண்ணீர் மொண்டு சென்ற பிறகே இந்த சமாரியா ஸ்திரீ அங்கு செல்லமுடியும். ஒருக்கால் அவள் அப்பொழுது களைப்பாய் இருந்திருப்பாள். அன்றிரவை தனது புதிய கணவனுடன் (அதாவது புதிய பையன் நண்பனுடன்) அவள் கழிந்திருக்க வகையுண்டு. அவள் குடத்துடன் அங்கு வந்து, கயிற்றை இராட்டினத்தில் மாட்டிக் குடத்தை கிணற்றில் இறக்கினபோது, ஒரு மனிதன் அவளிடம், “தாகத்துக்குத் தா'' என்று கேட்பது அவள் காதில் விழுந்தது. அவள் திரும்பிப் பார்த்து நடுத்தர வயதுள்ள ஒரு மனிதன் அங்கு நின்று கொண்டிருப்பதைக் கண்டாள். அவருடைய தாடி சற்று நரைத்திருந்தது. அவருக்கு ஏறக்குறைய முப்பது வயது ஆகியிருந்தது. ஆனால் அவர் ஐம்பது வயதுள்ளவர் போல் தோற்றமளித்ததாக வேதம் கூறுகிறது. உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ? (யோவான்: 8:57) அவர், ''ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்'' என்றார். (யோவான்: 8:58). பாருங்கள்? அவர்களால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்களை அவர் அசைத்துவிட்டார். இன்றைக்கு கிறிஸ்தவர்களை வருந்தி, கெஞ்சி, தட்டிக் கொடுத்து ஆலயத்திற்கு அழைக்க வேண்டியதாயுள்ளது. “நீங்கள் ஆலயத்திற்கு வருவீர்களானால் இன்னின்னதை செய்வோம்'' என்று வாக்களிக்கப்படுகிறது. 40ஆனால் இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது, அவருடன் அதிகம் பேர் இருந்தனர். அந்த கூட்டத்தை அவர் கண்டு, அவர்களைத் தவிர்க்க வேண்டுமென்று எண்ணம் கொண்டார். அவர், “நீங்கள் மனுஷ குமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பாணம் பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை” என்றார் (யோவான்: 6:53). அங்கு ஒரு மருத்துவர் அமர்ந்திருந்தாக கற்பனை செய்து பாருங்கள். அவர், ''இந்த மனிதன் நம்மை இரத்தம் குடிக்கும் மனிதர்களாக ஆக்கப் பார்க்கிறார். அவருடைய இரத்தத்தை குடிப்பதா? அர்த்தமற்ற செயல். நீங்கள் அனைவரும் அப்பைத்தியக்காரனை விட்டு விலகுங்கள்'' என்று சொல்லியிருப்பார். அவர்கள் அவரைவிட்டு விலகிச் சென்றனர். அவர் அதை விவரிக்கவில்லை. அதை விவரிக்க வேண்டிய அவசியமும் அவருக்கில்லை. நீங்கள் என்ன செய்வீர்கள் என்று பார்ப்பதற்கு சில சமயங்களில் அவர் உங்கள் விசுவாசத்தை அசைத்துப் பார்க்கிறார். இன்றைக்கும் அவர் அதையே செய்து வருகிறார். நீங்கள் எங்கு நிற்கிறீர்கள் என்றும், நீங்கள் உண்மையாக விசுவாசிக்கிறீர்களா என்றும் பார்ப்பதற்கு, சில காரியங்கள் பைத்தியக்காரத்தனமாய் தோற்றமளிக்கும்படி அவர் செய்கிறார். ஆனால் தேவனால் முன் குறிக்கப்பட்டிருந்த அந்த சீஷர்களோ சற்றேனும் அசையவில்லை. அவர்களால் அதற்கு விளக்கம் தர முடியவில்லை. எனினும் அவர்கள் அங்கிருந்து சென்று விட விரும்பவில்லை. இயேசு அங்கு வருகிறார். அவர் கூறினார்... கூட்டத்திலிருந்த ஆயிரக்கணக்கானோர் சென்றுவிட்டனர். 41அங்கு அமர்ந்திருந்த அந்த எழுபது பேர்களிடம் அவர் போதகம் செய்ய அவர் அவர்களை நியமித்திருந்தார். அவர், “அவர்களை அசைத்து அவர்கள் எங்கு நிற்கின்றனர் என்று பார்க்கலாம்'' என்று எண்ணினவராய், ”மனுஷ குமாரன் தாம் முன்னிருந்த வானத்திற்கு ஏறிப்போவதைக் காண்பீர்களானால் என்ன சொல்வீர்கள்?'' என்று அவரிடம் கேட்டார் (யோவான்: 6:62). “மனுஷ குமாரன் வானத்திற்கு ஏறிப் போவதா? நாங்கள் அவருடன் மீன் பிடித்தோம். அவருடன் ஆற்றங்கரையில் படுத்திருந்தோம். அவருடன் உண்டோம். அவர் பிறந்த தொழுவத்தை நாங்கள் கண்டிருக்கிறோம். அவருடைய தாயாரையும் சகோதரரையும் நாங்கள் நன்றாக அறிவோம். அப்படியிருக்க, மனுஷ குமாரன் தாம் முன்னிருந்த வானத்திற்கு ஏறிப் போவதா? அவர் நாசரேத்திலிருந்து அல்லவா வந்தார். இது கடினமான உபதேசம். எங்களால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது'' என்று கூறிவிட்டு அவர்களும் போய்விட்டனர். என்ன நடந்ததென்று பார்த்தீர்களா? ஆனால் அது சீஷர்களை அசைக்கவில்லை. அவர்களால் விளக்கம் தர முடியாவிட்டாலும், மற்றெல்லோரும் போய்விட்டனர். அவர் அதற்கு விளக்கம் தரவில்லை. அப்படி செய்ய வேண்டிய அவசியமும் அவருக்கு இருக்கவில்லை. 42இன்று கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் கலப்பின செடிகள் உள்ளன. அவர்களுக்கு பூச்சி மருந்தடித்து தட்டிக் கொடுத்து, “உங்கள் ஐக்கியத்தை எங்களுக்குத் தருவீர்களா? எங்களுடன் ஒத்துழைப்பீர்களா? இதை செய்வீர்களா?” என்றெல்லாம் அவர்களைக் கெஞ்ச வேண்டியதாயுள்ளது. ஓ, கலப்பின செடிகளே! நமக்கு தேவனுடைய ஆவியினால் பிறந்த உண்மையான கிறிஸ்தவ மார்க்கம் அவசியமாயுள்ளது. அது எவ்வித ஒத்துழைப்புக்காகவும் வேறெதற்கும் கெஞ்சாது. ஒன்றும் அதற்கு அவசியமில்லை. இயேசு திரும்பி சீஷர்களைப் பார்த்து, “நீங்களும் போய் விட மனதாயிருக்கிறீர்களோ?'' என்றார். அவர், ”பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்து கொள்ளவில்லையா? உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான். நீங்களும் ஏன் போய்விடக் கூடாது?'' என்றார். அப்பொழுது தான் பேதுரு அந்த மறக்கமுடியாத வார்த்தைகளைக் கூறினான் “ஆண்டவரே, யாரிடத்தில் போவோம்? நீர் ஜீவ ஊற்று என்பதை நாங்கள் அடையாளம் கண்டும், அறிந்தும் இருக்கிறோம். உம்மிடம் மாத்திரமே வார்த்தை உண்டென்று நாங்கள் அறிந்திருக்கிறோம்''. அந்த ஸ்திரீ அங்கு நின்று கொண்டிருந்தாள். அவர், “தாகத்துக்குத் தா'' என்றார். 43அவள், “அது வழக்கமில்லையே. நாங்கள் ஒதுக்கப்பட்டவர்கள். எங்களிடம் யூதனாகிய நீர் கேட்பது வழக்கமில்லையே!'' என்றாள். யூதர்களுக்கும் மற்றவர்க்கும் எவ்வித வித்தியாசமுமில்லையென்பதை அவர் அப்பொழுதே காண்பிக்க எண்ணினார. அவர் தேவன். அவர், ''நீ போய் உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டு வா'' என்றார். அவள், “எனக்குப் புருஷன் இல்லை'' என்றாள். அவர், ''நீ உண்மையைச் சொன்னாய். ஐந்து புருஷர்கள் உனக்கிருந்தார்கள். இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல'' என்றார். அந்த ஸ்திரீயை கவனியுங்கள். அவளுக்கு ஏதோ ஒன்று நேர்ந்தது. அவளுடைய இருதயத்தின் ஆழத்தில் முன் குறிக்கப்பட்ட வித்து புதைந்திருந்தது. அதையே அவர் பரிசேயர்களிடம் கூறின போது, அவர்கள் கொண்டிருந்த அவர்களுடைய விசுவாசத்தை அது அந்தகாரப்படுத்தினது, அவர்கள் தேவனைப் பின்பற்றுவதாகவும் அவரில் அன்பு கூருவதாகவும் கூறிக் கொண்டனர். ஆனால் சத்தியம் வெளிப்பட்ட போது, அது அவர்களை அகற்றிவிட்டது. ஆனால் அந்த ஸ்திரீயிடம் அது வெளிப்பட்ட போது, அது ஜீவனைப் பிறப்பித்தது. அது அந்தகாரத்தை அகற்றி எல்லாவற்றையும் வெண்மையாக்கினது. அவள், ''ஐயா, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன், நானூறு ஆண்டு காலமாக எங்களுக்கு ஒரு தீர்க்கதரிசி இருக்கவில்லை. நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். மேசியா வரும்போது, அவர் இவை எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் அந்த விசேஷ குணத்தினால் அவர் அடையாளம் கண்டு கொள்ளப்படுவாரென்று எனக்குத் தெரியும்'' என்றாள். அவர், “உன்னுடனே பேசுகிற நானே அவர்” என்றார். அதை கேட்டவுடனே அவள் தண்ணீர் குடத்தை வைத்துவிட்டு ஊருக்குள்ளே போய், நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள். வார்த்தையாகிய அபிஷேகம் பண்ணப்பட்ட மேசியாவின் விசேஷ குணம் இதுவல்லவா? வார்த்தை இருதயத்தின் சிந்தனைகளை அறிந்து கொள்ளுமல்லவா? அவர் மேசியாவல்லவா?'' என்றாள். ஓ, என்னே! 44பெரும்பாடுள்ள அந்த ஸ்திரீயைப் பாருங்கள். அவருடைய விசேஷ குணத்தினால் அவர் மேசியாவென்று அவள் அடையாளம் கண்டு கொண்டாள். பெரும்பாடுள்ள அந்த ஸ்திரீ வார்த்தையாகிய அவரை அடையாளம் கண்டு கொண்டாள். “தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் சுருக்கானதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது'' என்று எபி: 4:12 உரைக்கிறது. உங்களில் எத்தனை பேருக்கு அது தெரியும்? வார்த்தை அப்படித்தான் இருக்கிறது. அவர் வார்த்தையாயிருந்தார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராயிருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிககிறீர்களா? அதை நீங்கள் விசுவாசிப்பீர்களானால், அத்துடன் அது முடிவுபெறும். கவனியுங்கள், “இந்த ஸ்திரீ அவரை மாத்திரம் என்னால் தொட முடிந்தால், அவர்கள் அவரைக் குறித்து என்ன கூறினாலும் எனக்கு கவலையில்லை. அவர் யாரென்று வேதம் கூறுகிறதோ அது தான் அவர் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் மாத்திரம் அவரைத் தொட்டால் சுகமாவேன்'' என்றாள். அவள் மெல்ல நழுவி அவரைத் தொட்டு விட்டு, கூட்டத்தில் சென்று அமர்ந்து கொண்டாள். இயேசு, ''என்னைத் தொட்டது யார்?' என்று கேட்டார். அவர் பயங்கொண்டவர் (neurotic) என்பது போல் காண்பிக்க பேதுரு முயன்றான். அவன், ஏன், எல்லோருமே உம்மைத் தொடுகிறார்கள். அப்படி சொல்லாதேயும். அவர்கள் உம்மைத் தவறாக நினைத்துக் கொள்வார்கள். உமது அந்தஸ்தில் இருந்து கொண்டு. 'என்னைத் தொட்டது யார்' என்று கேட்கலாமா? “எல்லோரும் தான் உம்மைத் தொடுகிறார்கள்'' என்றான். சரி, “என்னை விட்டு வல்லமை புறப்பட்டு நான் பலவீனமடைந்ததை உணருகிறேன்'' என்றார் அவர். ஏதோ ஒன்று நடந்ததென்று அவர் அறிந்து கொண்டார். கவனியுங்கள், கவனியுங்கள், என்ன நடந்ததென்று - அடுத்த பெரிய அதிர்ச்சி; அவர் சுற்றும் முற்றும் பார்த்து அவளைக் கண்டுபிடித்துவிட்டார். அவள் என்ன நிலையிலிருந்தாள் என்பதை அவர் எடுத்துக் கூறி, அவளுடைய விசுவாசம் அவளை இரட்சித்தது என்றார், அவர் இருதயத்தின் இரகசியங்களை அறிந்து கொள்ளும் தேவனுடைய வார்த்தையாக அடையாளம் கண்டு கொள்ளப்பட்டார். ஓ, என்னே! வார்த்தை சரீரத்தை அறிந்துகொள்கிறது... இருதயத்தின் சிந்தனைகளை அறிந்து கொள்கிறது. 45முடிப்பதற்கு முன்னே ஒரு நிமிடம். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று எபி: 13:8 கூறுவது உண்மை. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நான் சொல்ல வேண்டிய அநேக காரியங்களை சொல்லாமலேயே விட்டுவிடுகிறேன். அவர் நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராயிருப்பாரானால், இந்த காலத்திலும் அவருடைய விசேஷ குணங்கள் அவரை அடையாளம் காண்பிக்கும். அது சரியா? அவர் அதை வாக்குத்தத்தம் செய்துள்ளார். ஞாபகம் கொள்ளுங்கள், அவருடைய விசேஷ குணம் தான் அவருடைய அடையாளம், எத்தனை பேர் அதை புரிந்து கொண்டீர்கள்? கைகளையுயர்த்துங்கள். அவருடைய விசேஷ குணம் தான் அவருடைய அடையாளம். எம்மாவூர் சீஷர்களைப் போன்று, இயேசு சிலுவையிலறையப்பட்டார். எல்லோரும் விசனமுற்றிருந்தனர். அவரைக் கல்லறையில் வைத்தார்கள். “யாரோ அவருடைய உடலைத் திருடிக் கொண்டு போய்விட்டார்கள்” என்னும் ஒரு வதந்தி கிளம்பினது. ஒரு நாள் அவர் எம்மாவூர் சீஷர்களுடன் நடந்து சென்றார். அவர்கள்... அவர், “நீங்கள் ஏன் விசனமாயிருக்கிறீர்கள்?'' என்று கேட்டார். அவர்கள், “நீர் அன்னியர் என்று தோன்றுகிறது'' என்றனர். அவர்களுடன் அவர் வீட்டுக்குள் பிரவேசித்தபோது, அவர் சிலுவையிலறையப்படுவதற்கு முன்பு செய்த ஒரு செயலை அவர்கள் முன்னிலையில் செய்தார். அவர் அதை ஒரு பிரத்தியேகமான முறையில் செய்வது வழக்கம். அதன் மூலம் அவர்கள், அவரே சிலுவையிலறைப்பட்ட இயேசு என்பதை உடனடியாகக் கண்டு கொண்டனர். ஆமென். 46தேவன் அவரை மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பினார், அன்று பெற்றிருந்த அதே விசேஷ குணங்களை அவர் இன்றும் பெற்றிருக்கிறார். இயேசு தீர்க்கதரிசனம் உரைத்தது போன்றே சோதோமின் நாட்கள் மறுபடியும் தோன்றி, குமாரன் ஜனங்களுக்கு வெளிப்படுவார். அவருடைய விசேஷ குணங்களை அடையாளம் கண்டுகொள்ளுதல். எபிரேயர்: 4:14,15, அன்று போல் இன்றும் நமது பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக் கூடிய (touched) பிரதான ஆசாரியராக அவர் இருக்கிறார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நமது பலவீனங்கள் அவரைத் தொடுகின்றன. அவர் நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராயிருப்பாரானால், அவர் எவ்விதம் கிரியை செய்வார்? அன்று அந்த ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தை தொட்டபோது எவ்விதம் கிரியை செய்தாரோ, அதே விதமாக இன்றும் கிரியை செய்வார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் என்றென்றும் ஜீவிக்கிறார். அன்று போல் இன்றும் அவருடைய விசேஷ குணங்கள் அவரை அடையாளம் காண்பிக்கும். உங்கள் முழு இருதயத்தோடும் அதை விசுவாசிக்கிறீர்களா? தேவன் தமது விசேஷ குணங்களினால் அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறார். அவருடைய விசேஷ குணங்கள் அவரை அடையாளம் காட்டுகின்றன. நாம் தலை வணங்குவோம். 47பரலோகப் பிதாவே, நாங்கள் சாதாரண ஆண்களும் பெண்களுமாக இங்கு அமர்ந்துள்ளோம், ஆனால் நாங்கள் வார்த்தையை உபயோகிக்கும்போது தேவனைத் தொடுகிறவர்களாயிருக்கிறோம். பிதாவே, வேதத்தில் இல்லாத ஒன்றை நான் கூற பயப்படுவேன். ஏனெனில் அது தவறாயிருக்கக் கூடும். ''இதிலிருந்து எதையாகிலும் ஒன்றை எடுத்துப் போட்டால் அல்லது இதனோடு எதையாகிலும் ஒன்றை கூட்டினால், அவனுடைய பெயரை நீர் ஜீவ புஸ்தகத்திலிருந்து எடுத்துவிடுவதாக கூறியிருக்கிறீர்“, ஆண்டவரே, அப்படிப்பட்ட பொல்லாங்கான காரியத்தை செய்தால், அதனால் என் ஜீவனுக்கு என்ன பயன்? எனவே அது இருக்கிற விதமாகவே நான் பேசுகிறேன். பிதாவே, அதை உறுதிபடுத்துவதாக நீர் வாக்கருளியிருக்கிறீர், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே நீர் உயிரோடெழுந்துவிட்டீர் என்றும், இன்றிரவு நீர் ஜீவிக்கிறவராக இருக்கிறீர் என்றும், நீர் எப்பொழுதும் போலவே இன்றும் எளிய மக்களை ஒருவரை இங்கும் ஒருவரை அங்குமாக அழைக்கிறீர் என்றும் விசுவாசிக்கிறேன்; குழுக்களையல்ல, ஸ்தாபனங்களையல்ல, மனிதன் புரிந்த பெரிய செயல்களின் காரணமாயல்ல. நீர் புறஜாதிகளிலிருந்து ஒரு கூட்டம் ஜனங்களை தெரிந்து கொள்வதாக சொல்லியிருக்கிறீர். “வயலில் இருவர் இருப்பார்கள். ஒருவன் ஏற்றுக் கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான். கட்டிலில் இருவர் படுத்துக்கிடப்பார்கள். ஒருவன் ஏற்றுக் கொள்ளப்படுவான். மற்றவன் கைவிடப்படுவான்''. அவ்விதமாகத் தான் உம்முடைய நாமத்திற்காக நீர் ஒருவரை இங்கும் ஒருவரை அங்குமாக, உமது மணவாட்டியை தெரிந்துகொள்கிறீர், உமது விசேஷ குணம் 48உம்மை அடையாளம் காட்டுகிறது என்பதை நான் விசுவாசிக்கிறேன். சோதோமின் நாட்களில் நடந்தது போல, வார்த்தையாகிய நீர் வெளிப்படும் நாளில் நடக்கும் என்று நீர் வாக்களித்திருக்கிறீர். இந்த மணி நேரத்துக்குரிய வார்த்தை, வார்த்தையை வெளிப்படுத்த வேண்டியதாயுள்ளது, வார்த்தை தீர்க்கதரிசிகளிடம் வந்தது போல். பிதாவே, யோவான் ஸ்நானன் பூமியில் நிற்பதையும், அவன் வெளிப்படுத்தின வார்த்தை அங்கிருந்ததையும் நாங்கள் காண்கிறோம். ''வார்த்தை எப்பொழுதும் தீர்க்கதரிசிகளிடத்தில் மாத்திரமே வருகிறது'' என்று வேதம் கூறுகிறது. வார்த்தை அப்பொழுது மாமிச உருவில் இருந்தது. எனவே அது தண்ணீரில் நடந்து யோவான் ஸ்நானனிடத்தில் வந்தது. வார்த்தை தீர்க்கதரிசியினிடத்தில் வந்தது. பிதாவே, தேவனே, இன்றிரவு நீர் வந்து எங்களுக்கு உதவி செய்ய வேண்டுமாய் ஜெபிக்கிறோம். எங்கள் அவிசுவாசம் நீங்க உதவி செய்யும். எங்கள் குறைகளை மன்னியும். வியாதியஸ்தரையும் அவதியுறுபவரையும் சுகப்படுத்தும். ஆண்டவரே உம்மிடத்திலிருந்து வரும் ஒரே ஒரு வார்த்தை. மனிதன் கூறும் எல்லாவற்றையும் விட முக்கியம் வாய்ந்ததாக இருக்கும், பிதாவே, பேசும். நீர் நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராக இருக்கிறீர். எங்களை இப்பொழுது உம்மிடம் சமர்ப்பிக்கிறோம். இன்றிரவு நாங்கள் வீடு திரும்பும் போது, எம்மாவூர் போய்க் கொண்டிருந்த சீஷர்கள், நீர் புரிந்த ஒரு செயலின் மூலம் எப்படி உம்மை உயிர்த்தெழுந்த ஆண்டவராக அடையாளம் கண்டு கொண்டனரோ, அவ்விதம் நாங்களும் கண்டுகொள்ளச் செய்யும். அவர்கள், “அவருடைய உடலைத் திருடிக் கொண்டு போய்விட்டனர். அவர்கள் இதை செய்தனர், அதை செய்தனர்'' என்று மற்றவர் கூறின போதிலும், அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்னும் நிச்சயத்தை அவர்கள் பெற்றிருந்தனர். ஆண்டவரே, மறுபடியும் உம்மை உயிர்ததெழுந்தவராக இன்றிரவு எங்களுக்குக் காண்பித்து, இப்பட்டினத்தைச் சுற்றிலுமுள்ள, நித்திய ஜீவனுக்கென்று நியமிக்கப்பட்டவர்களை உம் பக்கம் அழைத்துக் கொள்ளமாட்டீரா? இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 49இன்னும் பதினைந்து நிமிடங்கள் தங்கும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நாம் பத்து நிமிடங்கள் தாமதமாகிவிடுவோம். நான் துரிதப்பட வேண்டும். ஜெப அட்டைகள், அது தானே கொடுக்கப்பட்டுள்ளது? ஒன்றிலிருந்து இருபது எண்களை நாம் தெரிந்து கொள்வோம். யாரிடம் “ஜீ” ஒன்று உள்ளது? கையுயர்த்துங்கள் (ஒலி நாடாவில் காலி இடம் -ஆசி). உங்கள் ஜெப அட்டைகளை கைகளில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்காக ஜெபிக்கப்படும். இன்றிரவு உங்களுக்கு ஜெப அட்டை கிடைக்கவில்லையென்றால், எப்படியும் அது கிடைக்கும். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து கூடிய வரை வேகமாக நடந்து வந்து வரிசைப்படுங்கள். சரி, ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, மூன்று பேர் காணவில்லை. ஏழு, ஏழு, ஒன்று, இரண்டு, மூன்று... ராய், எனக்குப் பதிலாக எண்ணுங்கள். சரி, பத்து. ஒன்றிலிருந்து பத்து. இப்பொழுது பதினைந்து. “ஜி” ஒன்று முதல் பதினைந்து... பத்து, பதினொன்று, பன்னிரண்டு, பதின்மூன்று, பதினான்கு, பதினைந்து. சரி இதோடு நிறுத்திக் கொள்வோம். ஒன்பதரை மணிக்கு இவ்விடம் விட்டு சென்றுவிடலாம் என்னும் எங்கள் வாக்குறுதியை காப்பாற்ற முயல்கிறோம். ஆனால் அது முடியாது என்று நினைக்கிறேன். அது எனக்குத் தெரியும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இடைவிடாத கவனத்தை செலுத்த விரும்புகிறேன. 50இதுவே அந்த மணி நேரம் என்று நான் உங்களுக்கு சத்தியத்தை எடுத்துரைத்தேன். அது வேதத்தில் உள்ளது. நீங்கள் வேறொரு பள்ளியில் கற்பிக்கப்பட்டிருக்கலாம். பரிசேயர்களும் அப்படித்தான் கற்பிக்கப்பட்டிருந்தனர். ஆனால் வேதம், “அந்த நாளில் ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்'' என்றுரைத்தது. அது அப்படியே நிறைவேறிற்று. மேசியாவின் விசேஷ குணம் இப்படி இருக்கும் என்று அவர் உரைத்தார். அவர் கூறின விதமாகவே அது இருந்தது. ஆனால் அவர்களோ அதை விசுவாசிக்கவில்லை. அதற்காக அவர் செய்ய வேண்டியவைகளை நிறுத்திவிடவில்லை. அவர் அவைகளை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். இன்றைக்கும் அவ்வாறேயுள்ளது. நாம் கடைசி நாட்களின் கடைசி மணி நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நள்ளிரவுக்கு இன்னும் மூன்று நிமிடங்கள் உள்ளன என்று விஞ்ஞானம் கூறுகிறது. அதைக் காட்டிலும் இப்பொழுது காலதாமதமாகிவிட்டது என்று நான் நினைக்கிறேன். கம்யூனிஸம் நாட்டில் நுழைந்துவிட்டது. போதகர்கள் கிறிஸ்துவுக்குப் பின்னால் செல்வதற்கு பதிலாக, கம்யூனிஸத்திற்குப் பின்னால் சென்றுவிட்டனர். அதை குற்றம் கண்டு பிடிப்பதற்காக அவர்கள போனது போல் காணப்படுகின்றது. அதற்குப் பதிலாக, நாம் வாழும் நேரத்தை அவர்கள் ஏன் காணக்கூடாது? கம்யூனிஸம்... என்னே, என்னே! நான் கம்யூனிஸத்திற்கு பயப்படமாட்டேன், கர்த்தருடைய வருகையின் போது சபை ஆயத்தமற்ற நிலையில் இருக்குமானால், அதுவே பயப்படக் கூடியதாகும். அமெரிக்கா முழுவதும் - எல்லோரும் - தேவனிடம் திரும்பட்டும். அப்பொழுது கம்யூனிஸத்திற்கு என்ன நேரிடுகிறதென்று காண்பீர்கள். வியாதி என்னவென்பதை நீங்கள் முதலில் கண்டு பிடித்துவிட்டு, அதற்கு பரிகாரம் தேடவேண்டும். 51இப்பொழுது எல்லோரும் பயபக்தியாயிருங்கள். தயவு செய்து நடந்து கொண்டிருக்க வேண்டாம். உங்களில் எத்தனை பேருக்கு ஜெப அட்டைகள் இல்லாமலிருந்து, தேவன் உங்களை சுகமாக்க வேண்டுமென்று விரும்புகிறீர்கள்? உங்கள் கைகளையுயர்த்தி, “நான் விசுவாசிக்கிறேன'' என்று கூறுங்கள் - நீங்கள் எங்கிருந்தாலும். இப்பொழுது கவனியுங்கள். ஒலிபெருக்கி பணிபுரிகிறது என்று நினைக்கிறேன் (சகோ. பிரான்ஹாம் ஒலிபெருக்கியில் ஊதுகிறார் - ஆசி). சரி, பின் வரிசையிலுள்ளவர்கள் நான் பேசுவதைக் கேட்க முடிகிறதா? சரி, சகோ. ராய், அதை கவனித்துக் கொள்ளுங்கள். நான் கூறும் எல்லாவற்றைக் காட்டிலும் தேவனிடத்திலிருந்து வரும் ஒரு வார்த்தை அதிக முக்கியம் வாய்ந்ததாயிருக்கும். இங்கிருந்து ஜனங்களைக் காண்பது மிகவும் கடினமாயுள்ளது. விளக்கு வெளிச்சம் முகத்தில் படுவதனால் ஜனங்களைக் காணமுடியவில்லை. எனக்கு தெரியவில்லை, நான் காண்பவரில் ஒருவர் கூட எனக்கு அறிமுகமாகாதவர். உங்களில் எத்தனை பேர் எனக்கு அந்நியர் - உங்களைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது என்பதை அறிந்துள்ளவர்கள் - உங்கள் கைகளையுயர்த்துங்கள், எல்லாவிடங்களிலும் கைகள் உயர்த்தப்பட்டுள்ளன என்று நினைக்கிறேன், ஜெப வரிசையில் உள்ளவர்களே, உங்களைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது என்று அறிந்துள்ளவர்கள், உங்கள் கைகளையுயர்த்துங்கள், எல்லோருமே. 52அவர் யார்? அவர் நமது பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக் கூடிய (touched - தொடப்படக்கூடிய) பிரதான ஆசாரியர், அவருடைய வஸ்திரத்தை தொட்ட அந்த ஸ்திரீக்கு ஒருக்கால் ஜெப அட்டை இருந்திருக்காது. ஆயினும் அவள் அவரைத் தொட்டாள். அப்படி அவள் தொட்டபோது, ஏதோ ஒன்று சம்பவித்தது. நீங்களும் அவ்வாறே அவரை தொடுங்கள். ''அவர் நமது பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக் கூடிய (தொடப்படக் கூடிய) பிரதான ஆசாரியர்“ என்று எபிரேயர்: 4 கூறுகிறது என்று உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? சரி, அவர் அதே விசேஷ குணத்தை இப்பொழுது வெளிப்படுத்துவாரா? அவர் நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராயிருந்தால் அப்படி செய்ய வேண்டும். சகோ. பெர்ரீ, அவர்களை இப்பொழுது என்னிடம் கொண்டு வாருங்கள். நீங்கள் எல்லோரும் மிகுந்த பயபக்தியாயிருங்கள். சகோதரியே, இங்கு வாருங்கள். நான் கூறுவதை உங்களால் கேட்க முடிகிறதா? எனக்குத் தெரியவில்லை. அங்குள்ள பொறியாளரைப் பாருங்கள். ஒலியை எப்படி அதிகமாக்குவது என்று எனக்குத் தெரியவில்லை... 53ஒரு தரிசனம். இப்பொழுது, நினைவில் கொள்ளுங்கள், நான் மேசியாவல்ல, நான் கிறிஸ்துவல்ல. ஆனால் அவர் இங்கிருக்கிறார், அவர் இங்கிருக்கிறார் என்பதை நீங்கள் கண்டு கொள்ள வேண்டுமென்று நான் முயற்சி செய்கிறேன். அவர் தமது வார்த்தையை நிறைவேற்றுகிறார். இந்த அம்மையார் வியாதிப்பட்டிருக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை. அவர்களை எனக்குத் தெரியாது. என்னைக் காட்டிலும் அவர்கள் வயதில் மூத்தவர்கள். நமக்கு அநேக ஆண்டுகள் இடைவெளி இருக்கலாம். நாம் இருவரும் அநேக மைல்கள் தொலைவில் பிறந்திருக்கலாம். நாம் சந்திப்பது இதுவே முதல் தடவை. யோவான்: 4-ல் நமது ஆண்டவர் ஒரு ஸ்திரியை சந்தித்தது போன்றது இது. நீங்கள் புரிந்து கொள்வதற்காக இதை அவ்வளவு தெளிவுபடுத்துகிறேன். அப்படி செய்வதனால் நியாயத்தீர்ப்பின்போது என் மேல் இரத்தப்பழி இருக்காது. கடைசி நாட்களில் இது மறுபடியும் நிகழுமென்று இயேசு வாக்களித்துள்ளார். அது ஒரு வாக்குத்தத்தம் என்பதை இந்த வாரத்தில் நீங்கள் கண்டு கொள்வீர்கள். 54இந்த அம்மையாரை எனக்கு தெரியாது. இது முதன் முறையாக ஒரு மனிதனுக்கும் ஸ்திரீக்குமிடையே நேரிடும் சந்திப்பாகும். நீங்கள் எதற்காக வந்திருக்கிறீர்கள் என்றும், உங்களுடைய கோளாறு என்னவென்றும், அது பணக்கஷ்டமா, குடும்ப சம்பந்தமானதாவென்று கர்த்தராகிய இயேசு எனக்கு வெளிப்படுத்தித் தருவாரானால்; இயற்கைக்கு மேம்பட்ட ஒரு வல்லமை தான் அதை செய்ய முடியும். ஏனெனில் உங்களை எனக்குத் தெரியாது. அப்படி நேர்ந்தால், இது இயற்கைக்கு மேம்பட்ட வல்லமையினால் நேர்ந்ததென்று உங்களில் எத்தனை பேர் சாட்சி பகருவீர்கள்? நீங்களும் பரிசேயரைப் போன்று விளையாட்டுத்தனமாய், “அது அசுத்த ஆவி'' என்று கூறலாம். அநேகர் அவ்விதம் கூறுகின்றனர். அப்படியானால், ”அது உங்களுக்கும் தேவனுக்குமிடையேயுள்ள விஷயம். அதற்கான பலனை நீங்கள் அனுபவிப்பீர்கள். அது தேவனால் உண்டானது“ என்று நீங்கள் கூறுவீர்களானால், அதற்கான பலனையும் நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். (இப்போது, அது நல்லது, பாருங்கள்) 55என்னை ஒரு நிமிடம் நோக்கிப் பாருங்கள். பேதுருவும் யோவானும் அலங்கார வாசலைக் கடந்து சென்ற போது 'எங்களை நோக்கிப் பார்' என்று கூறினது போல, உங்களை எனக்குத் தெரியாது. எனக்குப் பக்கத்திலுள்ள பரிசுத்த ஆவியானவர் உங்கள் இருதயத்திலுள்ளதை வெளிப்படுத்தித் தருவாரானால், ''தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானதாயும். இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது'' என்று வேதம் கூறுகிறது. வேதம் அப்படித்தான் கூறுகிறது. அப்படியானால் அது இருதயத்தின் இரகசியங்களை வெளிப்படுத்துகிறது. அது தேவனின் இந்த நாளில் வெளிப்பட்டுள்ள வார்த்தையின் விசேஷ குணமாய் இருக்கும். எத்தனை பேர் அதை விசுவாசிக்கிறீர்கள்? அது என்னவென்று அறிந்து கொண்டீர்களா? 56அதைக் குறித்து உங்களிடம் பிரசங்கித்தேன். அது என்னவென்று உங்களிடம் கூறினேன். ஆனால் அது உண்மையா? அது தான் நாம் அடுத்த படியாக அறிந்து கொள்ள வேண்டியது. அது உண்மையாயிருக்குமானால் நீங்கள் ஒவ்வொருவரும் அதை அறிந்து கொள்வீர்கள். அது உண்மையாயிராவிட்டால். நான் கிறிஸ்துவுக்கு பொய் சாட்சியாக இங்கு வந்திருக்கிறேன் என்று அர்த்தம். ஆனால் அது உண்மையாயிருக்கும் பட்சத்தில், நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இருதயங்களை அவருக்கு கொடுத்து, உங்கள் தேவைகள் அனைத்திற்காகவும் அவரை ஏற்றுக் கொண்டு அவரை முழு இருதயத்தோடும் விசுவாசிக்க வேண்டும். இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் தாமே இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தம்மை அடையாளம் காண்பிக்கட்டும். நீங்கள் எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள் என்று எனக்கு ஒன்றும் தெரியாது. நீங்கள் அழகான, தாயைப் போன்ற ஒரு அம்மையாராக இங்கு நின்று கொண்டிருக்கிறீர்கள். அதை மாத்திரமே நானறிவேன். ஆனால், நீங்கள் எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள் என்றும், உங்களிலுள்ள கோளாறு என்னவென்றும் பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்த முடியும். அப்பொழுது அது உண்மையா இல்லையாவென்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். உங்கள் முகத்திலுள்ள தசைகளுக்காக உங்களுக்கு ஜெபம் தேவையாயுள்ளது. அது நரம்பு சம்பந்தமானது உங்கள் முகத்தில் அது உண்மையானால் உங்கள் கையையுயர்த்துங்கள். நீங்கள், “அவர் அதை ஊகித்தார்'' எனலாம். 57இந்த அம்மையாரும் மிகவும் அருமையானவர்கள். சகோதரியே, இங்கு சற்று பாருங்கள். அவர் உங்களிடம் என்ன கூறினார் என்று எனக்குத் தெரியாது. அது என்னவாயிருப்பினும், அது உண்மை. அதற்கு நீங்கள் இப்பொழுது சாட்சியாயிருக்கிறீர்கள். அல்லவா? (சகோதரி ''அது உண்மை'' என்கிறார்கள் - ஆசி). அது உண்மை (இருபது ஆண்டு காலமாக). என்னே! தேவன் உங்களை சுகமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது அவருடைய பிரசன்னம் என்று நீங்கள் அறிவீர்கள். இங்கு ஏதோ ஒன்று உங்களை அறிந்துள்ளது, ஏதோ ஒன்று. அந்த ஸ்திரீயின் கோளாறு என்னவென்று இயேசு அறிந்தது போல, உங்கள் கோளாறு என்னவென்பதையும் அவர் அறிந்திருக்கிறார். நீங்கள் வேறு யாருக்கோ பாரப்பட்டுள்ளதாக தோன்றுகிறது. அது ஒரு மனிதன்... அது உங்கள் கணவர். அவரும் இங்கிருக்கிறார். அது உண்மை. உங்கள் கணவரின் கோளாறு என்னவென்று தேவன் எனக்குக் காண்பிப்பார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (அந்த சகோதரி, ஆம், “நான் விசுவாசிக்கிறேன்” என்கிறார்கள் - ஆசி). அவர் வியாதிப்பட்டிருகிகிறார். அவருக்கு பல சிக்கல்கள் உள்ளன. ஆனால் அவரைத் தொந்தரவுபடுத்துவது இருதயக் கோளாறு. அது உண்மையானால் உங்கள் கையையுயர்த்துங்கள் (“அது உண்மை''). அவருக்கு குடல் பிதுக்கமும் (hernia) உள்ளது (”அது உண்மை''). அது உண்மையா? (''ஆம், அது உண்மை''). அவர் நரம்பு தளர்ச்சியால் வேறு அவதியுறுகிறார். அது உண்மையல்லவா? (“ஆம்''). இயேசு எனக்கு வெளிப்படுத்துவாரானால்! அவர் பேதுருவிடம் அவர் யாரென்பதை வெளிப்படுத்தினார். நீங்கள் யாரென்று அவர் எனக்கு வெளிப்படுத்துவாரானால், அது அவர் என்பதை நீங்கள் விசுவாசிப்பீர்களா? (சகோதரி, “ஆம்” என்கிறார்கள் - ஆசி). நீங்கள் இங்குள்ளவரல்ல (“ஆம்”). நீங்கள் கிழக்கிலிருந்து வந்திருக்கிறீர்கள். நீங்கள் லூயிசியானாவைச் சேர்ந்தவர்கள் (“உண்மை”). அது உண்மை. உங்கள் பெயர் திருமதி. கோல்மன் (“அது உண்மை”). வீடு திரும்புங்கள். இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குகிறார். உங்களுடைய விசுவாசமே உங்களைச் சுகமாக்குகிறது. 58இப்பொழுது விசுவாசியுங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்து தமது உயிர்த்தெழுதலுடன் தம்மை ஒன்றுபடுத்திக் கொள்கிறார். நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? எந்த மனிதனும் இதை செய்ய முடியாது என்பதை சுய நினைவுள்ளவர் யாவரும் அறிவர். அங்கிருப்பவர்களே, தேவனிடம் இவ்வாறு முறையிடுங்கள்; இந்த மனிதனுக்கு என்னைத் தெரியாது என்பது எனக்குத் தெரியும். எனவே நான் ஏதோ ஒன்றிற்காக ஜெபிக்கப் போகிறேன். ஆண்டவரே, உம் வஸ்திரத்தை நான் தொடலாமா? அப்படியானால் உம்முடைய உயிர்த்தெழுதலில் உம்மை நீர் ஒன்றுபடுத்திக் கொண்டீர் என்று அர்த்தம். நீர் திரும்பும், “உம்மை நான் தொடட்டும், பிறகு அவர் மூலமாக என்னோடு பேசும்''. என்ன நடக்கிறதென்று பாருங்கள். முயற்சி செய்து பாருங்கள். ஐயா, நீர் எப்படியிருக்கிறீர்? இந்த பக்கம் சற்று அருகாமையில் வருவீர்களா? உங்களுக்குப் பின்னால் ஜனங்கள் இருக்கிறார்கள். எல்லா ஆவிகளும் நாடித் துடிப்பைப் போன்று இருக்கின்றன. எல்லோரும் அருகாமையிலுள்ள போது, அந்த ஆவிகளையும் கிரகிக்க நேரிடுவதால் ஒரே குழப்பமாகிவிடுகிறது. நான் அவருடைய தாசன் என்று நீர் விசுவாசிக்கிறீரா? நீர் எதற்காக இங்கு வந்திருக்கிறீர் என்பதை கிறிஸ்து எனக்கு வெளிப்படுத்தித் தரமுடியும் என்று விசுவாசிக்கிறீரா? என்றாவது ஒரு நாள் நாம் நியாயத்தீர்ப்பில் சந்திக்க வேண்டுமென்றும், இன்றிரவுக்கான கணக்கை நான் ஒப்புவிக்க வேண்டுமென்றும் ஞாபகம் கொள்ளுங்கள். அது உங்களுக்குத் தெரியுமல்லவா? உங்களுடைய கோளாறு, ஒன்று உங்கள் முதுகு, உங்களுக்கு அநேக கோளாறுகள் உள்ளன. அவைகளில் ஒன்று முதுகுக் கோளாறு. மேலும் கண் கோளாறு. அது உண்மையானால் கையுயர்த்துங்கள். அதுவுமின்றி, ஒரு கெட்ட பழக்கத்தை நீங்கள் விட்டு விட விரும்புகிறீர்கள். அதை நான் வெளிப்படையாக கூறலாமா? நீங்கள் புகைபிடிப்பதை விட்டு விட விரும்புகிறீர்கள். நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள அது இடறலாயுள்ளது என்பதை உணர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள். அது உங்கள் இருதயத்தின் விருப்பமாயுள்ளது. அது உண்மை, உங்கள் கைகளை இப்படி ஆட்டுங்கள். அது உங்களை விட்டுப் போய்விட்டது. சென்று, பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டு, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் சுகம் பெறுங்கள் . 59நீங்கள் விசுவாசிக்கிறார்களா? தயவு செய்து பயபக்தியுடன் இருங்கள். தாமதமாகின்றது. இன்னும் சிறிது நேரம் அமர்ந்திருங்கள். நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்? நாம் ஒருவருக்கொருவர் அந்நியர் (சகோதரி, “ஆம்” என்கிறார்கள் - ஆசி). கர்த்தராகிய இயேசு நம் இருவரையும் அறிந்திருக்கிறார். பயப்பட வேண்டாம், சாந்தமாயிருங்கள். அது அவருடைய பிரசன்னம். நிச்சயமாக அது அவருடைய பிரசன்னம். இப்பொழுது உங்களுக்கு வினோதமான உணர்வு, இனிமையான, தாழ்மையான உணர்வு ஏற்பட்டுள்ளது. ஒரு மனிதனுக்கு முன்னால் நிற்கும் போது அத்தகைய உணர்வு ஏற்படாது. உங்களில் எத்தனை பேர் அக்கினி ஸ்தம்பத்தின் புகைப்படத்தைக் கண்டிருக்கிறீர்கள்? அது டெக்ஸாஸில் முதன் முறையாக, இரண்டாம் முறையாக எடுக்கப்பட்டது. இப்பொழுது அது அந்த ஸ்திரீயின் மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது - வேறொரு பரிமாணத்தில் உங்களால் அதை பார்க்க முடிந்தால் நலமாயிருக்கும். நீங்கள் விசுவாசிக்கும் போது, உங்கள் விசுவாசம் அதை கொண்டு வருகிறது. பாருங்கள்? நாளை இரவு ஒன்பது மணிக்கே ஜெப வரிசையை தொடங்கிவிடுவோம். உங்களை நீண்ட நேரம் வைத்துக் கொண்டிருக்கிறேன். இந்த ஒரு ஸ்திரியை மாத்திரம் நாம் எடுத்துக் கொள்வோம், ஒரு நிமிடம். 60அங்கு உட்கார்ந்திருக்கும் சகோதரியே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் பெலவீனம் காரணமாக நீங்கள் கவலையுற்றிருக்கிறீர்கள். அது தான் உங்கள் கோளாறு, பாருங்கள்?அவர்கள் எதை தொட்டார்கள்? அந்த அம்மாளை எனக்குத் தெரியாது. அவர்கள் பிரதான ஆசாரியரை தொட்டார்கள். பாருங்கள், என் முதுகு தான் அவர்களை நோக்கியிருந்தது, ஆபிரகாமின் காலத்தில் சம்பவித்தது போல. சகோதரியே, ஒரு நிமிடம் இந்தப் பக்கம் பாருங்கள். உங்கள் இருதயத்தில் ஒரு பாகம் குடி கொண்டுள்ளது. அது உங்கள் மகளைப் பற்றியது. அவளுக்கு காதில் கோளாறு ஏற்பட்டுள்ளது. அது உண்மை. உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி, விசுவாசியுங்கள், அவள் சுகமடைவாள். நான் கூறுவது புரிகிறதா? நீங்கள் விசுவாசித்தால் எல்லாம் கூடும். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? பின்னாலுள்ள ஒரு அம்மாள் தங்கள் கையை தாழ்த்தினார்கள். அவர்கள் இப்பொழுது என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நீரிழிவு வியாதியினால் அவதியுறுகிறார்கள். நீங்கள் அமர்ந்த நிலையில் இருக்கும் போதே, தேவன் நீரிழிவு வியாதியைப் போக்குவாரென்று விசுவாசிக்கிறீர்களா? சரி. அப்படியானால் நீங்கள் கேட்டுக் கொள்வதை பெற்றுக் கொள்வீர்கள், விசுவாசியுங்கள். அங்கிருக்கும் அம்மையாருக்கு பெருங்குடல் கோளாறும், சிறுநீர்பை கோளாறும் உள்ளது. தேவன் உங்களை சுகமாக்குவாரென்று விசுவாசிக்கிறீர்களா? சரி, நீங்கள் கேட்டுக் கொள்வதைப் பெற்றுக் கொள்வீர்கள். அந்த அம்மாளின் கை. பாருங்கள், அவர்களைக் கேட்டுப் பாருங்கள், இனிமையான ஒன்று. அவர்களைப் பற்றிக் கொண்டது. பாருங்கள். அவர்களுடைய விசுவாசம் தான் அதை செய்தது. நானல்ல, அது தேவன. 61அந்த ஓரத்தில் ஒரு மனிதன் அமர்ந்திருக்கிறார். அவருக்கு சுவாசக் குழாயில் கோளாறு ஏற்பட்டுள்ளது. அங்கு அமர்ந்து கொண்டு என்னை நோக்கிக் கொண்டிருக்கும் அந்த வயோதிபருக்கு, ஐயா, தேவன் அதை சுகமாக்க முடியுமென்று விசுவாசிக்கிறீர்களா? உங்கள் பக்கத்தில் அமர்ந்திருக்கும் சகோதரிக்கு சரீரத்தில் கிருமி உபாதை (infection) ஏற்பட்டுள்ளது. சகோதரியே, அது உண்மையானால், உங்கள் கைக்குட்டையை ஆட்டுங்கள். சரி, சரி, நீங்கள் எல்லோரும் ஒருவர் மேல் ஒருவர் கை வைத்து உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். தகப்பன் மகள் யாராயிருந்தாலும். ஏன் அப்படி செய்யக் கூடாது? ஒருவர் மேல் ஒருவர் கை வைத்து உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். இயேசு உங்களை சுகமாக்குவார். நீங்கள் விசுவாசிக்கத் தக்கதாக உங்கள் விசுவாசத்திற்கு சவால் விடுகிறேன். அவருக்குப் பின்னால் அமர்ந்திருக்கும் அந்த சகோதரிக்கு வயிற்றுக் கோளாறு ஏற்பட்டுள்ளது. சகோதரியே, தேவன் உங்களை சுகமாக்குவாரென்று விசுவாசிக்கிறீர்களா? அது தான் உங்கள் கோளாறு, அது உண்மையானால் எழுந்து நில்லுங்கள். ஜனங்கள் உங்களைப் பார்க்கட்டும் பாருங்கள்? (அவரைத் தொடுகிறவர்கள் யார்?). நான் தவறாகக் கூறாமலிருந்தால், உங்கள் பக்கத்தில் அமர்ந்திருப்பது உங்கள் தாயார், அவர்களுக்கு குடலில் கிருமி உபாதை ஏற்பட்டுள்ளது. அம்மையாரே, தேவன் அதை சுகமாக்குவாரென்று விசுவாசிக்கிறீர்களா? எழுந்து நின்று சுகத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். 62விசுவாசியுங்கள்! அவர் நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராயிருக்கிறார். அவர் தம்மை அடையாளம் காட்டுகிறார். நான் அவருடைய தீர்க்கதரிசி அல்லது தாசன் என்று விசுவாசிக்கிறீர்களா? தீர்க்கதரிசி என்று அழைத்துக் கொள்ளும் போது அது அநேகருக்கு இடறலாயுள்ளது. அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இங்கு பாருங்கள், உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் பயங்கர நரம்பு தளர்ச்சியினால் அவதியுறுகிறீர்கள். அது எதனால் நேர்ந்ததென்று என்னால் சொல்ல முடியுமென்று விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கு வாகன விபத்து நேர்ந்தது (சகோதரி, “அது உண்மை” என்கிறார்கள் - ஆசி). அது உண்மை, அது உண்மை, வாகன விபத்து. அது உங்கள் முதுகை பாதித்து உங்கள் தோள்களுக்கும் சென்றுவிட்டது. அது சரியா? அது உங்களை விட்டு செல்லப் போகின்றது. மாதவிடாய் சமயத்தில் அது உங்களை அதிகம் தொந்தரவு செய்தது. ஆனால் நீங்கள் சுகமடையப் போகிறீர்கள். சென்று, உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். நீங்கள் விசுவாசித்தால், இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குவார். ஆமென். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் மூட்டுவாதத்தை சுகப்படுத்த முடியும் என்று விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் நடந்து கொண்டேயிருங்கள். அவர் உங்களை சுகமாக்குவார். 63உங்களில் எத்தனை பேர் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்கள்? அப்படியானால், “நான் உண்மையாக முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன்'' என்று சொல்லுங்கள். நீங்கள் மாத்திரம் விசுவாசித்தால்! அவர் நீரிழிவு வியாதி கொண்டவர்களை சுகமாக்குவாரென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் நடந்து கொண்டே, “ஆண்டவரே, அதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்'' என்று சொல்லுங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். அப்பொழுது நீங்கள் சுகம் பெறுவீர்கள். அங்குள்ளவர் எத்தனை பேர் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்கள்?நண்பர்களே, “நீங்கள் இங்குமிங்கும் நடமாடுவதனால் அதை தொந்தரவு செய்கிறீர்கள். எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள் என்று கேட்கிறேன். உங்கள் கரங்களையுயர்த்தி, என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன'' என்று சொல்லுங்கள். நீங்கள் ஒன்றைச் செய்ய வேண்டுமென்று இப்பொழுது கேட்டுக் கொள்ளப் போகிறேன். இயேசு தமது வாக்குத்தத்தத்தை நிறைவேற்றி அதை நிரூபித்துக் காண்பித்தார் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களானால், இயேசு தமது சபைக்கு கடைசி கட்டளை ஒன்றையும் அளித்திருக்கிறார்; “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும். எத்தனை பேர் அதை விசுவாசிக்கிறீர்கள்? அவர். வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள். அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்'' என்றார். அந்த வாக்குத்தத்தத்தை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் பக்கத்திலுள்ள யார் மேலாவது உங்கள் கைகளை வையுங்கள். அவர் உங்களை சுகப்படுத்தாவிட்டால், நீங்கள் மரித்துப் போவீர்கள். உங்களை கறுத்த நிழல் மூடியுள்ளது. ஆனால் இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குவார். அதை விசுவாசிக்கிறீர்களா? சரி, சென்று விசுவாசியுங்கள். நீங்கள் சுகம் பெறுவீர்கள். வாருங்கள், அம்மையாரே. தேவன் உங்கள் காச நோயையும் நீரிழிவையும் போக்கி உங்களுக்கு சுகமளிப்பார் என்று விசுவாசிப்பீர்களா? சரி, சென்று, உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்து சுகமடையுங்கள். 64நீங்கள் ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுகிறீர்களா? ஒருவர் மேல் ஒருவர் கைகளை வையுங்கள். நாம் எல்லோரும் ஒருமித்து ஜெபிப்போம். எல்லோரும் ஒருவர் மேல் ஒருவர் கைகளை வையுங்கள். தாமதமாகிறது நாம் ஜெபிப்போம். கர்த்தராகிய இயேசுவே, தேவன் ஜனங்களின் மத்தியில் தம்மை அடையாளம் காட்டுகிறார் என்பதை நாங்கள் உறுதியாக அறிந்திருக்கிறோம். அவருடைய விசேஷ குணங்கள் நேற்றும், இன்றும், என்றும், வெளிப்படுகின்றன. ஓ, தேவனாகிய கர்த்தாவே, நீரே இப்படிப்பட்ட ஒரு வாக்குத்தத்தத்தை அருளியிருக்கிறீர்; “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்'', உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை விசுவாசிப்பதாக இவர்கள் அறிக்கை செய்துள்ளனர். அவர் இவ்வுலகிலிருந்த போது வெளிப்படுத்தின அதே விசேஷ குணங்களை இப்பொழுதும் அவர் வெளிப்படுத்தி தம்மை நிரூபித்து, வேத வாக்கியங்கள் முற்றிலும் உண்மையென்றும், அவர் நேற்றும், இன்றும், என்றும், மாறாதவர் என்பதையும் உறுதிபடுத்தியுள்ளார். கர்த்தராகிய இயேசுவே, உயிர்த்தெழுந்து தம்மை வெளிப்படுத்தும் தேவனுடைய குமாரனுடைய திவ்விய பிரசன்னத்தில் இந்த விசுவாசிகள் ஒருவர் மேல் ஒருவர் தங்கள் கைகளை வைத்திருக்கும் இந்நேரத்தில் தேவனுடைய குமாரன் இன்றிரவு மறுபடியும் எங்கள் மத்தியில் விசுவாசிகளின் மாமிசத்தில் மாமிசமாகியுள்ள இந்நேரத்தில், எல்லா அசுத்த ஆவிகளும் எல்லா வியாதிகளும் இந்த ஜனங்களை விட்டுப் போகும்படி கட்டளையிடுகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவ்விதம் நிகழ்வதாக. 65உயிர்த்தெழுந்த தேவனுடைய குமாரனின் பிரசன்னத்தில் உங்கள் விண்ணப்பங்கள் கேட்கப்பட்டு சுகத்தைப் பெற்றுக் கொண்டதாக விசுவாசிக்கும் அனைவரும் எழுந்து நின்று, “என் முழு இருதயத்தோடும் அதை ஏற்றுக் கொள்ளுகிறேன்'' என்று சொல்லுங்கள். விசுவாசிக்கிறவர்கள் அனைவரும் இயேசு கிறிஸ்துவின் சமுகத்தில் எழுந்து நில்லுங்கள். அவரைத் துதியுங்கள், அவருக்கு துதியும் மகிமையும் செலுத்துங்கள். தேவன் தாம் அளித்துள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் நிறைவேற்றி உறுதிபடுத்துவார்.